வரும் நவம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள சர்வதேச சந்தைக்கான அல்ட்ராவைலட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் F77 பைக் மாடலின் டாப் ஸ்பீடு மணிக்கு 195 கிமீ வரை கொண்டிருக்கலாம் என டீசர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற உள்ள EICMA 2023 மோட்டார் கண்காட்சி நவம்பர் 7-12 வரை நடைபெறுகின்றது. இந்தியாவிலிருந்து ராயல் என்ஃபீல்டு, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் அல்ட்ராவைலட் என மூன்று நிறுவனங்கள்பங்கேற்கின்றன.
Ultravoilet F77
F77 எலக்ட்ரிக் பைக் உட்பட F99 என இரண்டு மாடல்களையும் காட்சிப்படுத்த உள்ள நிலையில், இந்நிறுவனத்தின் தொழில்நுட்பங்கள் என அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட உள்ள நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர் மூலம் பைக்கின் அதிகபட்ச வேகம் 195 Km/hr முதல் 200 km/hr வரை எட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
தற்பொழுது இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற F77 பைக்கின் முழுமையான சிங்கிள் சார்ஜ் மூலம் 307 கிமீ IDC ரேஞ்சு வழங்குகிறது. 2.9 வினாடிகளில் 0 முதல் 60 கிமீ வேகத்தை எட்டும் மாடலின் டாப் ஸபீடு மணிக்கு 152 கிமீ வேகத்தை எட்டும். ₹ 3.80 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) தொடங்குகின்ற F77 எலக்ட்ரிக் பைக்கிற்கு 8 ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ வரை உத்தரவாதத்தை வழங்குகிறது.