நடப்பு ஜூன் 2023-ல் விற்பனைக்கு வரவிருக்கும் பைக்குகளில் ஹீரோ, ஹோண்டா முதல் ட்ரையம்ப் என பல்வேறு நிறுவனங்களின் மாடல்களை பற்றி அறிந்து கொள்ளலாம். இதுதவிர சில மேம்பட்ட E20 மற்றும் OBD2 மேம்பாடு உள்ள இருசக்கர வாகனங்களையும் எதிர்பார்க்கலாம்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஜூன் 14 ஆம் தேதி எக்ஸ்ட்ரீம் 160R 4வி மாடலை விற்பனைக்கு கொண்டு வருகின்றது. இந்த மாடல் விற்பனையில் உள்ள எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கினை அடிப்படையாக கொண்டு 163cc என்ஜின் பெற்று கூடுதல் பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்துவதுடன் 4 வால்வுகளை கொண்டிருக்கும்.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கிற்கு மாற்றாக அப் சைடு டவுன் ஃபோர்க் பெற்று சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் ரைடிங் மோடுகள் பெற்றிருக்கும்.
பல்வேறு டீலர்களை வந்தடைந்துள்ள 2023 ஹீரோ பேஷன் பிளஸ் பைக் மாடல் ஹோண்டா ஷைன் 100 உட்பட மற்ற 100cc பைக்குகளுக்கு சவால் விடுக்கும் வகையில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இந்த மாடலும் 14 ஆம் தேதி வெளியாகலாம்.
97.2 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7.91 bhp at 8,000 rpm பவர் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
ஆக்டிவா மற்றும் ஆக்டிவா 125 ஸ்கூட்டர்களை போல ரிமோட் கண்ட்ரோல் வசதியுடன் கூடிய ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரில் OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்ற மேம்பாடு கொண்டதாக வரவுள்ளது. புதிய ஹோண்டா டியோ ஏர்-கூல்டு, 109cc, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7.8hp மற்றும் 9Nm டார்க் வழங்கும். கூடுதலாக OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக இருக்கும்.
விற்பனைக்கு அடுத்த சில நாட்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
4 வால்வுகளை பெற்ற 200cc என்ஜின் பெற்ற ஃபேரிங் ஸ்டைல் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கில் புதிய நிறங்களை கொண்டதாகவும் வரவுள்ளது. இந்தியாவில் கிடைக்கின்ற ஃபேரிங் ஸ்டைல் பெற்ற மாடல்களில் பட்ஜெட் விலையில் கிடைக்கும். இந்த மாடலும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகலாம்.
எக்ஸ்ட்ரீம் 200S 4V மாடலின் 200cc என்ஜின் பெற்ற அதிகபட்சமாக 8500rpm-ல் 19.1 hp குதிரைத்திறன் மற்றும் 6500Rpm-ல் 17.1 Nm டார்க் திறனை கொண்டதாக விளங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
ஸ்போர்ட்டிவ் ஸ்டீரிட் ஃபைட்டர் கேடிஎம் 200 டியூக் பைக்கில் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு கூடுதலாக சில நிறங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மற்றபடி, வேறு எந்த மாற்றங்கள் தற்பொழுது பெற வாய்ப்பில்லை. இந்த மாடலின் அறிமுகம் குறித்து எந்த உறுதியான தேதியும் அறிவிக்கப்படவில்லை.
சர்வதேச அளவில் ஜூலை 27 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள ட்ரைய்ம்ப் 400cc ஸ்கிராம்பளர் மற்றும் ரோட்ஸ்டெர் குறைந்த விலை பைக்குகள் இந்திய சந்தையில் ஜூலை 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
குறிப்பாக இந்த பைக் ஜூலை 3 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 மற்றும் ராயல் என்ஃபீல்டடு 350cc பைக்குகளுக்கும் சவால் விடுக்கும் வகையில் வரக்கூடும்.