வரும் 2023, ஜூலை 3 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கின் புதிய படங்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மிக நேர்த்தியான ரோட்ஸ்டெர் மாடலில் 440cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் மாடலான எக்ஸ் 440 பைக் மாடல் ஹீரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவகைளை வழங்க உள்ளது.
Harley-Davidson X440
ஹார்லி டேவிட்சனின் ரோட்ஸ்டெர் மாடல் வடிவமைப்பு ஹார்லியின் பிரசத்தி பெற்ற XR1200 பைக்கின் தோற்ற வடிவமைப்பினை எக்ஸ் 440 தழுவியுள்ளது. வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், கொண்டு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பாட் ஆனது ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதி ஆகியவற்றுடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டிருக்கலாம்.
X440 பைக்கின் முன்பக்கத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் பெறுகிறது. இதில் ப்ரீ-லோடு அட்ஜெட்மென்ட் கொண்டதாகும். முன்புறத்தில் 18 அங்குல சக்கரம் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் பெற்று டிஸ்க் பிரேக்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்.
எக்ஸ் 440 பைக்கில் 440cc சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 40 bhp பவர் மற்றும் 35 Nm டார்க் வெளிப்படுத்தலாம்.இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் இடம்பெற்றிருக்கலாம்.
இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கிற்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு பைக்குகள், ஜாவா பைக்குகள், ஹோண்டா ஹைனெஸ் சிபி 350, பஜாஜ்-ட்ரையம்ப் பைக் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.
ஹார்லி எக்ஸ் 440 ரோட்ஸ்டெர் பைக்கின் விலை சுமார் ரூ. 2.50 லட்சம் – ரூ.3.00 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) ஆக துவங்கலாம்.