டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முதல் ஃபேரிங் மற்றும் பவர்ஃபுல்லான மாடலாக வரவுள்ள அப்பாச்சி RR 310S பைக்கின் காப்புரிமை பெறுவதற்காக கோரிய மாடலின் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

அப்பாச்சி RR 310S

பரவலாக பல்வேறு முறை சாலை சோதனை ஓட்டத்தில் சிக்கிய அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் மாடல் மிகவும் நேர்த்தியான வடிவ அம்சங்களை பெற்ற அகுலா 310 கான்செப்ட் பைக்கினை பின்னணியாக கொண்டதாகும்.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியிடப்பட்ட டிவிஎஸ் அகுலா 310 கான்செப்ட் அடிப்பையிலான இதில் முன்பக்கத்தில் மிகவும் கூர்மையான அமைப்பினை வெளிப்படுத்தும் வகையிலான எல்இடி முகப்பு விளக்கு, அகலமான விண்ட்ஷீல்டு பெற்றதாகவும் காட்சி தருகின்றது.

டிவிஎஸ்-பி.எம்.டபிள்யூ நிறுவனங்களின் கூட்டணியில் உருவான பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கின் அடிப்படையிலான ஃபேரிங் செய்யப்பட்ட அப்பாச்சி 310 மாடலில் 34 bhp ஆற்றல் மற்றும் டார்க் 28 Nm வெளிப்படுத்தும் 313சிசி எஞ்ஜினே டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் பைக்கில் இடம்பெற உள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். டிவிஎஸ் அப்பாச்சி RR310S பைக் மைலேஜ் லிட்டருக்கு 36 கிமீ வரை எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ வரை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வருகை

செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை டிவிஎஸ் எவ்விதமான அதிகார்வப்பூர்வ அறிக்கையை வெளியிடாத நிலையில் அடுத்த சில வாரங்களில் இந்த மாடல் வருகை விபரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரூ. 1.90 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் டிவிஎஸ் அப்பாச்சி RR310S பைக் விற்பனைக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.