Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு 2025 ஹண்டர் 350 பைக்கில் என்ன எதிர்பார்க்கலாம்..!

2024-Royal-enfield-Hunter-350

வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ள ராயல் என்ஃபீல்டின் ஹண்டர்ஹூடு (HunterHood) என்ற சிறப்பு நிகழ்ச்சி டெல்லி மற்றும் மும்பையில் ஒரே நேரத்தில் நடைபெற உள்ள அரங்கில் 2025 ஆம் ஆண்டிற்கான ஹண்டர் 350 விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 2022 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த முதல் ஹண்டர் 350 அமோக வரவேற்பினை பெற்று 5 லட்சத்துக்கும் கூடுதலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ள நிலையில், விற்பனையில் உள்ள மாடலில் எதிர்கொள்ளும் பின்புற சஸ்பென்ஷன் சார்ந்த பிரச்சனைகள் நீக்கப்பட்ட புதிய ஹண்டரை எதிர்பார்க்கலாம்.

குறிப்பாக, வரவுள்ள 2025 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350ல் OBD-2B ஆதரவுடன் 6,100 rpmல் 20.2 bhp பவருடன்  27 Nm டார்க் ஆனது 4,000 rpmல் வழங்குகின்றது. இந்த மாடலில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

மற்றபடி, புதிய எல்இடி ஹெட்லைட், மேம்படுத்தப்பட்ட கிளஸ்ட்டர் உள்ளிட்ட அம்சங்களுடன் புதிய பாடி கிராபிக்ஸ் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிறவனத்தின் குறைந்த விலை மாடலாக ரூ.1.50 லட்சத்தில் துவங்கும் ஹண்டர் தொடர்ந்து அதே ஆரம்ப விலையில் துவங்கலாம், ஆனால் டாப் வேரியண்ட் விலை அதிகரிக்கப்படலாம்.

Exit mobile version