இந்தியாவில் மேக்ஸி ஸ்டைல் பெற்ற ஸ்கூட்டர் வரிசையில் பிரசத்தி பெற்ற யமஹா நிறுவன ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் புதிதாக நிறங்கள் சேர்க்கப்பட்டு OBD-2B மேம்பாட்டினை கொண்ட எஞ்சினுடன் ரூ.1,50,689 முதல் ரூ.1,54,169 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
OBD-2B ஆதரவினை பெற்ற இந்த ஸ்கூட்டர் மாடலில் 155cc லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 15bhp பவர் வெளிப்படுத்த 8000rpm-லும் மற்றும் 13.9Nm டார்க் 6,500rpm-ல் வெளிப்படுத்துகிற நிலையில் CVT கியர்பாக்ஸுடன் வருகின்றது.
புதிதாக வந்துள்ள 2025 ஏரோக்ஸில் ஸ்மார்ட் கீ நுட்பத்தின் பெற்ற டாப் S வேரியண்டில் ஐஸ் ஃபுளோ வெர்மிலான் மற்றும் ரேசிங் ப்ளூ நிறத்துக்கு புதிய கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி, பேஸ் வேரியண்டில் கிரே வெர்மிலான் மற்றும் மெட்டாலிக் பிளாக் என இரு நிறங்கள் கிடைக்கின்றது.
பேஸ் வேரியண்டில் எல்இடி ஹெட்லைட் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை பெற்று மாடலின் மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் பிரேக்கிங் முறையில் 230 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 110/80-14 முன்புற டயர் மற்றும் 140/70-14 பின்புற டயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த மாடலுக்கு நேரடியான போட்டியை ஹீரோ ஜூம் 160 ஏற்படுத்துகின்றது.