
இந்தியாவில் யமஹா மோட்டார் நிறுவனம் பிரசத்தி பெற்ற மேக்ஸி ஸ்டைல் ஏரோக்ஸ் அடிப்படையில் ஏரோக்ஸ் E என்ற பெயரில் 106 கிமீ ரேஞ்ச் கொண்ட சக்திவாய்ந்த மின்சார ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியுள்ளது.
பட்ஜெட் விலையில் வரவுள்ள EC-06 தவிர இந்நிறுவனம் FZ ரேவ் மற்றும் எக்ஸ்எஸ்ஆர் 155 நியோ ரெட்ரோ மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
Yamaha Aerox E
(2×1.5kwh) என 3 kWh பேட்டரி பேக் கொண்டுள்ள நிலையில் ஏரோக்ஸ் இ ஸ்கூட்டரில் மிகவும் சக்திவாய்ந்த 9.4kw (12.6 bhp) பவர் மற்றும் 48Nm டார்க் வெளிப்படுத்தும் மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 106 கிமீ வரை ரேஞ்ச் வெளிப்படுத்தும் என சான்றளிக்கப்பட்டுள்ளது.
ஈக்கோ, பவர் மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான ரைடிங் மோடுகளுடன் அமைந்துள்ள நிலையில், ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்தும் ICE மாடலை போலவே அமைந்துள்ள புதிய ஏரோக்ஸ் இ ஸ்கூட்டரில் “ஹார்ட்-ஷேக்கிங் ஸ்பீட்ஸ்டர்” வடிவமைப்பு தத்துவத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘ X’ சென்டர் மோட்டிஃப், டூயல்-எல்இடி வகுப்பு-D ஹெட்லைட்கள், LED ஃப்ளாஷர்கள் மற்றும் ஒரு 3D-விளைவு LED டெயில்லைட் பெற்றதாக அமைந்துள்ளது. TFT டிஸ்ப்ளே டர்ன்-பை-டர்ன் நேவிகேஷனை வழங்குகிற அதே நேரத்தில் Y-கனெக்ட் மொபைல் ஆப் வசதியும் உள்ளது.
யமஹா இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள இரு மின்சார ஸ்கூட்டரில் EC-06 மாடல் 2026ல் வெளிவரவுள்ள நிலையில், ஏரோக்ஸ் இ அறிமுகத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


