Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

தமிழகத்தில் யமஹா ஸ்கூட்டர், பைக்குகளுக்கு சிறப்பு பொங்கல் ஆஃபர்

by automobiletamilan
January 7, 2021
in பைக் செய்திகள்

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒருவரான யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்கள், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  சிறப்பு பண்டிகை சலுகைகளை இன்று அறிவித்தன.

தமிழகம் யமஹாவுக்கு ஒரு முக்கியமான சந்தையாக விளங்குகின்றது. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 23 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. வளர்ச்சி மற்றும் பன்முகத்தன்மை அடிப்படையில் சந்தையின் முக்கியத்துவம் மிகப்பெரியது மற்றும் இந்நிறுவனத்தின் பிஎஸ் VI இரு சக்கர வாகனங்கள் ஸ்டைலான 125 சிசி ஸ்கூட்டர்கள் மற்றும் ஸ்போர்ட்டிவான, மோட்டார் சைக்கிள் 150 சிசி மற்றும் 250 சிசி உள்ளிட்டவை யமஹாவை மேலும் வலுப்படுத்துகின்றது.

பொங்கல் பண்டிகையின்போது ஸ்கூட்டர் வாங்குபவர்கள் இப்போது யமஹாவின் அதிக எரிபொருள் திறன், ஸ்போர்ட்டிவ் மற்றும் ஸ்டைலான, இலகுவான 125 சிசி ஸ்கூட்டர்களை குறைந்தபட்ச டவுன் பேமெண்ட்  ரூ.999 கொண்டு வாங்கலாம் அல்லது ரூ.4000 மதிப்புள்ள இலவச ஸ்கூட்டர் ஆக்செரீஸ் பாகங்களை பெறலாம்.

மோட்டார் சைக்கிள் வாடிக்கையாளர்கள் யமஹாவின் வழங்கும் கவர்ச்சிகரமான நிதித்திட்டங்களின் கீழ் அனைத்து மோட்டார் சைக்கிள் மாடல்களிலும் 5.99% முதல் குறைந்த வட்டி விகிதத்தைப் பெறலாம்.

யமஹாவின் ஸ்கூட்டர் சந்தையில் 125சிசி இன்ஜின் பெற்ற ஃபேசினோ 125,
ரே ZR 125 FI மற்றும் ரே ZR ஸ்டீரிட் ரேலி 125 FI மற்றும் பைக் பிரிவில் 150 cc இன்ஜின் பெற்ற R15 V 3.0, MT-15, FZ FI, FZS FI V3.0 மற்றும் 250சிசி இன்ஜின் பெற்ற FZ 25, FZS 25 ஆகியவை இடம்பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தின் மொத்த சேவை மையங்கள் தமிழகத்தில் 299 ஆக உள்ளது. 2020 ஆம் ஆண்டில் யமஹாவின் சந்தைப் பங்கு 9.4 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது 2019 ஆம் ஆண்டின் சந்தைப் பங்கோடு ஒப்பிடும்போது சற்றே அதிகமாகும். மேம்பட்ட செயல்திறன் நிறுவனத்தின் கவனம் செலுத்திய வாடிக்கையாளர் அணுகுமுறை மற்றும் இணைய அடிப்படையிலான சேவைகள் மூலம் தயாரிப்பு மேம்பாடுகளுக்கு காரணமாக இருக்கலாம்.

Tags: India Yamaha MotorYamaha FZ V3
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version