Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

RX100 திரும்ப வருமா.., வந்தாலும் அந்த சத்தம் சாத்தியமா..?

By MR.Durai
Last updated: 19,June 2024
Share
SHARE

rx 100 bike coming soon

யமஹா இந்தியாவில் வெளியிட்டிருந்த 2 ஸ்ட்ரோக் ஆர்எக்ஸ்100 மோட்டார்சைக்கிளை மீண்டும் விற்பனைக்கு 4 ஸ்ட்ரோக் மாடலாக மாற்றி திரும்ப RX100 பைக்கினை கொண்டு வருவதற்கு சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் ஆனால் எந்தளவுக்கு சாத்தியம் என்பதனை காலம்தான் பதில் சொல்லும் என யமஹா இந்தியா சேர்மேன் ஈஷீன் சிஹானா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து தினமும் RX100 எப்பொழுது வரும் என்ற கேள்வியை யமஹா எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள சேர்மேன், பைக்கின் தோற்றம், பெர்ஃபாமென்ஸ் உள்ளிட்டவை சாத்தியமாக இருந்தாலும், ஆனால் அந்த ஐகானிக் ஆர்எக்ஸ்100 மாடலின் சத்தத்தை எவ்வாறு 4 ஸ்ட்ரோக்கில் மறு உருவாக்கம் செய்து என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளதாக குறிப்பிடுகின்றார்.

2 ஸ்ட்ரோக் பெற்ற 100சிசி பைக்கில் இருந்த அதே செயல்திறனை உருவாக்குவதில் சிரமம் என்றாலும் கூடுதல் சிசி வழங்கும் பொழுது சாத்தியப்படும் ஆனால், பழைய எக்ஸ்ஹாஸ்ட் ஒலியை சிதைக்காமல் கொண்டு வருவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. ஆனால், இதனை சாத்தியப்படுத்துவது மிகவும் சவாலாக இருக்கும் அதே நேரத்தில் புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்க வேண்டியுள்ளது.

ஆனால் ஐகானிக் RX100 பெயரை எவ்விதத்திலும் சிதைக்காமல் புதிய ஆர்எக்ஸ் மாடலை உருவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது என்பது ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் மட்டும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“RX 100 உயர் செயல்திறன் மற்றும் பிரீமியம் பொருத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் யமஹா பிராண்ட் இமேஜை நிலைநிறுத்த உதவியது, மேலும் அந்த பிராண்டின் மீது எனக்கு முழு மரியாதை உண்டு, மேலும் அது மீண்டும் உயிர்ப்பிக்கப்படுமா” என்பதனை காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சந்தைக்கு என பிரத்தியேகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில்  யமஹா மோட்டார் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:RX100Yamaha
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
vida vx2 electric scooter
Vida Electric
ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2023 hero Super Splendor xtech Bike
Hero Motocorp
ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர், Xtech பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
hero motocorp passion plus
Hero Motocorp
ஹீரோ பேஷன் பிளஸ் பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
2025 hero xpulse 210 first look
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms