Automobile Tamilan

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி பெறுமா..? ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் இரண்டாவது மாடலாக வெளியிடப்பட்டுள்ள ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது குடும்பம் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

ஏதெர் முதல்முறையாக வெளியிடப்பட்ட 450 சீரியஸ் ஆனது நிறுவனத்திற்கு மிக சிறப்பான பெயரை பெற்று மேலும் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படுத்தும் மாடல் என்ற பெயரை பெற்று இருக்கின்றது. குறிப்பாக 450X மாடல் ஆனது சிறப்பான ரைடிங் அனுபவம் மற்றும் மிக விரைவான ஆசிலரேஷன், ஸ்போர்ட்டிவ் சவாரிக்கு ஏற்றதாகவும், பேட்டரியின் திறன் மிகச் சிறப்பாக இருந்தது. இது போன்ற காரணங்களால் 450X வெற்றி பெற மிக முக்கிய காரணமாக இருந்தது.

Ather Rizta escooter

புதிதாக வந்துள்ள ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின்  மாற்றியமைக்கப்பட்ட சேஸ், சஸ்பென்ஷன் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்ட அடிப்படையான அம்சங்கள் 450 பைக்கில் இருந்து தான் பெறப்பட்டிருக்கின்றது. அதனால் நம்முடைய முக்கியமான கவனமான பேட்டரி மற்றும் மோட்டார் தொடர்பான எந்த ஒரு குறைபாடுகளும் இருக்காது.

இது மட்டுமல்லாமல் சில முக்கிய வசதிகளான ஆட்டோ ஹோல்ட், ரிவர்ஸ் மோடு, ஃபால் சேஃப், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல் மற்றும் ஆட்டோ இண்டிகேட்டர் கட்-ஆஃப்.மற்றும் மேஜிக் ட்விஸ்ட் போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

ரிஸ்டாவிற்கும் 450 சீரியஸ் மாடல்களுக்கு மிக முக்கியமான வித்தியாசமே, 450X, 450S மிக சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் மற்றும் ஸ்போர்டிவ் தன்மையை கொண்டிருக்கின்ற நிலையில் புதிய ரிஸ்ட்டா மாடலானது மிகக் குறைவான பெர்ஃபாமென்ஸ் மற்றும் சிறப்பான ரேஞ்ச் அதிகப்படியான பயன்பாடுகளை வழங்கும் வகையிலான இடவசதியை கொண்டிருக்கின்றது.

ரிஸ்டாவில் விலை குறைப்பிற்காக  டச் ஸ்கிரீன் சார்ந்த அம்சம் இல்லாமல் 7 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனினை இணைக்கும் பொழுது ஏதெர் ஆப்ஸ் மற்றும்  மியூசிக் பிளேபேக்கைக் கட்டுப்படுத்தவும், அழைப்புகளை ஏற்க/நிராகரிக்க நேவிகேஷன், அறிவிப்புகள் பெறவும் மற்றும் உங்களின் 5 சமீபத்திய வாட்ஸ்ஆப் செய்திகளைச் பார்க்கவும் அனுமதிக்கிறது. மேலும் புரோ பேக் வசதிகள் மூலம் கூடுதலான கட்டணத்தில் வசதிகள் வழங்கப்படுகின்றது.

குறிப்பாக, தற்பொழுது இந்திய சந்தையில் கிடைக்கின்ற எந்தவொரு ஸ்கூட்டரிலும் இல்லாத வகையில் மிக அகலமான மற்றும் நீளமான இருக்கை மூலம் இருவர் மிகவும் தாராளமாக அமர்ந்து கொள்ள ஏதுவாக உள்ளது.

இடவசதியை வழங்குவதுற்கு ஏதெர் மிகுந்த கவனம் செலுத்தி இருக்கைக்கு அடிப்பகுதியில் இரு விதமான பூட்டை பிரித்து முன்புறத்தில் சிறிய இடத்தை கொடுத்து ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சிறிய பொருட்களை வைப்பதற்கும், அடுத்து மிகவும் அகலமான இடவசதி என 34 லிட்டர் கொள்ளளவு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஃபுளோர் போர்டின் பக்கம் அப்ரானில் 22 லிட்டர் Frunk உள்ளது.

ரைடிங் அனுபவம்

ஏதெரின் 450X, 450S என இரு மாடலின் பெர்ஃபாமென்ஸை விட சற்று குறைவாக வெளிப்படுத்தும் நிலையில் சிறப்பான ரேஞ்ச் வழங்கும் வகையில் அமைந்துருக்கின்றது. மணிக்கு அதிகபட்ச வேகம் 80 கிமீ ஆக உள்ள நிலையில் ஸ்மார்ட்ஈக்கோ மற்றும் ஜிப் மோடு என இரண்டு மோடுகளை கொண்டுள்ளது.

மிகவும் போக்குவரத்து மிக்க சாலைகளிலும் நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் 780மிமீ இருக்கை உயரம் பெற்று 119 கிலோ எடை கொண்டுள்ள ரிஸ்டாவினை இருபாலரும் இலகுவாக கையாளும் வகையில் ஐக்யூப் ஸ்கூட்டருக்கு கடும் சவாலினை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் வழங்கப்பட்டு சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்த கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்று கூடுதலாக ஸ்கிட் கண்ட்ரோல் என இந்நிறுவனத்தால் அழைக்கப்படுகின்ற டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளதால் இ-ஸ்கூட்டர் நிலை தடுமாறுவனை தடுக்கும் வகையில் உள்ளது.

4.3kW பவரை வெளிப்படுத்துகின்ற மாடல் 22 Nm டார்க் வழங்குவதுடன் இரு விதமான  2.9kwh, மற்றும் 3.7kwh பேட்டரி ஆப்ஷனை பெறுகின்றது. இதில் 2.9kwh முதற்கட்டமாக டெலிவரி துவங்கப்பட உள்ளதால் 123 கிமீ ரேஞ்ச் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், உண்மையான பயணிக்கும் ரேஞ்ச் 90 கிமீ முதல் 100 கிமீ வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

ரிஸ்டா நிறைகள்

ரிஸ்டா இ-ஸ்கூட்டர் குறைகள்

Ather Rizta on road price

e-Scooter ex-showroom Price on-road Price
Ather Rizta S 2.9 Kwh ₹  1,09,000 ₹ 1,17,312
Ather Rizta Z 2.9 Kwh ₹  1,29,999 ₹ 1,32,561
Ather Rizta Z 3.7 Kwh ₹ 1,49,999 ₹ 1,52,837

(All price on Road Tamil Nadu)

ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புகைப்படங்கள்

Exit mobile version