இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஏதெர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற மாடல்களின் சிறப்புகள் மற்றும் ஆன் ரோடு விலை பட்டியலை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
ஏதெர் எனர்ஜி மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர் வடிவமைப்பினை ஏற்படுத்தி 450 சீரியஸ் மாடலானது அமோக வரவேற்பினை சந்தையில் பெற்று நாட்டின் மூன்றாவது பெரிய எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பாளராக இந்நிறுவனம் விளங்குவதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது. தற்பொழுது புதிதாக வந்துள்ள ஏத்தர் Rizta ஸ்கூட்டர் ஆனது ஃபேமிலி ஸ்டைல் லுக்கில் மிக நேர்த்தியாக அமைந்து பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இந்நிறுவனத்துக்கு மிகப்பெரிய ஒரு பிளஸ் ஆக அமைந்திருக்கின்றது.
450 சீரிஸ் மாடல் பொறுத்தவரை தற்பொழுது 450X, 450S மற்றும் 450 அபெக்ஸ் சிறப்பு எடிசன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனில் கிடைக்கின்ற நிலையில் புதிதாக வந்துள்ள ரிஸ்டா மாடலும் இதே ஆப்ஷனை பெற்றிருக்கின்றது.
Ather Rizta
குடும்பங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அகலமான இருக்கை ஆனது 900 மிமீ நீளமாகவும், மிகவும் தாராளமான 56 லிட்டர் (34 லிட்டர் இருக்கை அடிப்பகுதியிலும் 22 லிட்டர் Furnk) ஸ்டோரேஜ் வசதி, கூடுதலாக பல்வேறு டெக் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை கொண்டிருக்கின்றது.
ஏதெர் ரிஸ்டாவில் 2.9Kwh மற்றும் 3.7Kwh பேட்டரியுடன் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் கொண்டு டிராக்ஷன் கண்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு மேஜிக் ட்வீஸ்ட், மற்றும் 7 அங்குல டீப்வியூ டிஸ்பிளே ஆனது ரிஸ்டா S வேரியண்டிலும் ரிஸ்டா Z-ல் 7 அங்குல தொடுதிரை TFT வியூ கிளஸ்ட்டர் உள்ளது.
முன் பக்கத்தில் 90/90-12 டயர், மற்றும் பின்புறத்தில் 100/80-12 டயர் உள்ளது. முன்பக்கம் 200மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ டிரம் பின்புறத்தில் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்றுள்ளது.
வெள்ளை, கிரே மற்றும் ப்ளூ என ஒற்றை வண்ணங்களுடன் கூடுதலாக ப்ளூ, கிரே, க்ரீன் மற்றும் மஞ்சள் என நான்கு டூயல் டோன் வண்ண விருப்பங்களுடன் அமைந்திருக்கின்றது. ரேஞ்ச் மற்றும் பேட்டரி தொடர்பான அனைத்தும் கீழ் உள்ள அட்டவனையில் தொகுக்கப்பட்டுள்ளது.
ஏதெர் Rizta | ரிஸ்டா S | ரிஸ்டா Z | ரிஸ்டா Z |
மோட்டார் வகை | PMSM | PMSM | PMSM |
பேட்டரி | 2.9Kwh | 2.9kwh | 3.7kwh |
பவர் | 4.3kW | 4.3kW | 4.3kw |
டார்க் | 22 NM | 22 NM | 22 NM |
ரேஞ்சு (IDC) | 123 Km/charge | 123 Km/charge | 160Km/ch |
ரைடிங் ரேஞ்சு | 105 Km/charge | 105 Km/charge | 125km/ch |
அதிகபட்ச வேகம் | 80 Kmph | 80 Kmph | 80 Kmph |
சார்ஜிங் நேரம் (0-80%) | 6 hrs 40 Mins | 6 hrs 40 mins | 4 hrs 45 mins |
சார்ஜிங் நேரம் (0-100%) | 8 hrs 30 Mins | 8 hrs 30 mins | 6 hrs 10 mins |
ரைடிங் மோடு | Zip and SmartEco | Zip and SmartEco | Zip and SmartEco |
2.9Kwh பேட்டரி பெற்ற வேரியண்டுகள் முழுமையான சிங்கிள் சார்ஜில் உண்மையான பயணிக்கும் ரேஞ்ச் 105 கிமீ தரக்கூடும். டாப் 3.7 kwh பேட்டரி பேக் பெற்ற மாடல் 125 கிமீ வரை உண்மையான பயணிக்கும் ரேஞ்சை கொடுக்கலாம்.
ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.10 லட்சம் முதல் ரூ. 1.45 லட்சம் வரை கிடைக்கின்றது. ரிஸ்டாவின் ஆன்ரோடு விலை ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.53 லட்சம் வரை அமைந்துள்ளது.
Model | on-Road Tamil Nadu |
---|---|
Ather Rizta S | Rs.1,17,312 |
Ather Rizta Z (2.9kwh) | Rs.1,32,561 |
Ather Rizta Z (3.7 kwh) | Rs.1,52,837 |
கூடுதலாக இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகின்ற ஏதெர் புரோ பேக் வாங்குவதற்கான கட்டணம் ரிஸ்டா S 2.9kwh மாடலுக்கு ரூ.13,000, ரிஸ்டா Z 2.9kwh, ரூ.15,000 மற்றும் ரிஸ்டா Z 3.7kwh மாடலுக்கு ரூ.20,000 ஆக வசூலிக்கப்படுகின்து. இதன் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றிருக்கின்றது.
Ather 450S
ஏத்தரின் 450 சீரிஸ் ஸ்போர்ட்டிவான ஸ்டைல் வரிசையில் உள்ள குறைந்த விலை 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் 2.9kwh பேட்டரி பேக் பெற்றதாக முழுமையான சிங்கிள் சார்ஜில் பயணிக்கும் பொழுது 115 கிமீ என IDC சான்றிதழ் உள்ள நிலையில் உண்மையான பயணிக்கும் ரேஞ்ச் 85-90 கிமீ வரை கிடைக்கின்றது.
7 அங்குல டீப்வியூ டிஸ்பிளே கொண்டுள்ள மாடலில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் ஏதெர் புரோ பேக் மற்றும் பேட்டரி நீட்டிக்கப்பட்ட வாரண்டியுடன் ரூ.13,000 ஆக வசூலிக்கப்படுகின்றது. புரோ பேக் பெறும் பொழுது நான்கு ரைடிங் மோடுகள் SmartEco, Eco, Ride மற்றும் Sport ஆகியவை கிடைக்கும்.
ஏதெரின் 450எஸ் மாடலினை சார்ஜ் செய்ய 0-80 % பெற 6 மணி நேரம் 36 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில், 0-100 % பெற 8 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். கருப்பு, கிரே, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களுடன் கிடைக்கின்றது. முன் பக்கத்தில் 90/90-12 டயர், மற்றும் பின்புறத்தில் 100/80-12 டயர் உள்ளது. முன்பக்கத்தில் 200mm டிஸ்க் மற்றும் 190mm டிஸ்க் பின்புறத்தில் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்றுள்ளது.
ஏதெர் 450எஸ் விலை ரூ.1,25,546 (எக்ஸ்ஷோரூம்) ஆக உள்ளது. தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ரூ.1,33,306 ஆகும்.
Ather 450X
450X எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரு விதமான பேட்டரி பேக் பெற்றதாக விளங்கும் நிலையில் 7 அங்குல தொடுதிரை TFT டிஸ்பிளே கொண்டுள்ள இந்த மாடலில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் ஏதெர் புரோ பேக் மற்றும் பேட்டரி நீட்டிக்கப்பட்ட வாரண்டியுடன் ரூ.17,000 (2.9kwh), 450X 3.7kwh-க்கு ரூ.20,000 ஆக வசூலிக்கப்படுகின்றது. புரோ பேக் பெறும் பொழுது நான்கு ரைடிங் மோடுகள் SmartEco, Eco, Ride Sport மற்றும் Wrap ஆகியவை கிடைக்கும்.
ஏதெரின் 450X 3.7kwh மாடலினை சார்ஜ் செய்ய 0-80 % பெற 4 மணி நேரம் 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில், 0-100 % பெற 6 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகும். கருப்பு, கிரே, வெள்ளை, சிவப்பு, லூனார் கிரே மற்றும் பச்சை நிறங்களுடன் கிடைக்கின்றது. இரு பக்கமும் 90/90-12 டயருடன் முன்பக்கத்தில் 200mm டிஸ்க் மற்றும் 190mm டிஸ்க் பின்புறத்தில் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்றுள்ளது.
Ather 450 Specs | 450S | 450X 2.9Kwh | 450X |
மோட்டார் வகை | PMSM | PMSM | PMSM |
பேட்டரி | 2.9Kwh | 2.9kwh | 3.7kwh |
பவர் | 5.4kW | 6.4kW | 6.4kw |
டார்க் | 22 NM | 26 NM | 26 NM |
ரேஞ்சு (IDC) | 115 Km/charge | 111 Km/charge | 150Km/ch |
ரைடிங் ரேஞ்சு | 70-85 Km/charge | 70-85 Km/charge | 100-125km/ch |
அதிகபட்ச வேகம் | 90 Kmph | 90 Kmph | 90 Kmph |
சார்ஜிங் நேரம் | 8 hrs 36 Mins | 8 hrs 36 mins | 5 hrs 45 mins |
ரைடிங் மோடு | Smart Eco, Eco,
Ride & Sport |
Smart Eco, Eco, Ride,
Sport & Wrap |
Smart Eco, Eco, Ride,
Sport & Wrap |
ஏதெர் 450எக்ஸ் விலை ரூ.1,40,546 முதல் ரூ. 1,54,946 (எக்ஸ்ஷோரூம்) ஆக உள்ளது. தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ரூ.1,43,381 முதல் ரூ.1,62,932 ஆகும்.
Model | on-Road Tamil Nadu |
---|---|
Ather 450S | Rs.1,33,306 |
Ather 450X (2.9kwh) | Rs.1,48,381 |
Ather 450X (3.7 kwh) | Rs.1,62,932 |
Ather 450 Apex
ஏதெரின் ஸ்பெஷல் எடிசன் குறிப்பிட்ட காலம் மட்டும் தயாரிக்கப்பட உள்ள 450 அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏதெர் 450 அபெக்ஸ் விலை ரூ.1,94,945 (எக்ஸ்ஷோரூம்) உள்ள மாடல் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க திறனுடன் அமைந்துள்ளது. 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 2.9 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.
ஸ்மார்ட் ஈக்கோ மோடில் உண்மையான ரேஞ்ச் 110 கிமீ வரை வெளிப்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 450 அபெக்ஸ் 157 கிமீ ரேஞ்ச் வழங்கும் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள Wrap+ மோடில் பயணித்தால் ரேஞ்ச் 75 கிமீ வழங்குகின்றது.
7 அங்குல TFT தொடு திரை கிளஸ்ட்டர் பெற்று ஏதெர் புரோ பேக்கில் உள்ள ஏதெர் கனெக்ட் மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ஏதெர் ஆப் வசதிகள், மேஜிக் ட்விஸ்ட், ரைட் ஸ்டேட்ஸ், ஃபைன்ட் மை ஸ்கூட்டர் உட்பட எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், கோஸ்டிங் ரீஜென், வாகனம் விழுந்தால் ஆஃப் ஆகும் வசதி, ஆட்டோ ஹோல்ட் போன்ற வசதியை பெறுகின்றது.
சிறப்பு எடிசனில் பேனல்கள் மிக தெளிவாக காட்சிக்கு கிடைக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதி வரை மட்டுமே ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 2024 வரை மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கிடைக்கின்றது.
. ஏதெர் 450 அபெக்ஸ் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ரூ.2,03,460
பொதுவாக ஏதெர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரி, மோட்டார் மற்றும் வாகனத்திற்கான வாரண்டி 3 ஆண்டுகள் அல்லது 30,000 கிமீ வரை வழங்குகின்றது. கூடுதலாக பேட்டரி பேக் மற்றும் ஏதெர் புரோ பேக் பெற்றால் 5 வருடம் அல்லது 60,000 கிமீ வாரண்டி வழங்கப்படுகின்றது.
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விலையும்,தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ஆகும்.