ஏதெர் எனர்ஜி வெளியிட்டுள்ள புதிய ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் மிக அகலமான மற்றும் நீளமான இருக்கை, சிறப்பான பேட்டரி, ரேஞ்சு விலை உட்பட பல்வேறு அம்சங்களை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Ather Rizta E scooter
‘family scooter’ என்ற நோக்கத்தை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஏதெர் ரிஸ்டாவில் மிக நேர்த்தியாக கொடுக்கப்பட்டுள்ள அப்ரானில் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு இரு பக்கத்திலும் 12 அங்குல வீல் பெற்றிருக்கின்றது.
பாடி பேனல்கள் சற்று அகலாமாக கொடுக்கப்பட்டு முன்புற ஃபுளோர் போர்ட் தாராளமாக சிறிய அளவிலான சுமைகளை வைக்க ஏதுவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக இரண்டு பெரியவர்கள் மிக தாராளமாக அமர்ந்து செல்ல ஏதுவாக அகலமான இருக்கையுடன் பெரிய பேக் ரெஸ்ட் உடன் பயணிப்பவருக்கு வழங்கியுள்ளது. இருக்கையை இலகுவாக திறக்க ஏதுவாக ஸ்லாட்டும் உள்ளது.
ரிஸ்தா ஸ்கூட்டரின் இருக்கையின் அடிப்பகுதியில் இடவசதி 34 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக அமைந்துள்ளது. முன்புறத்தில் உள்ள அப்ரானில் Frunk மூலம் 22 லிட்டர் கொள்ளளவு என ஒட்டுமொத்தமாக 56 லிட்டர் கொள்ளளவு இடவசதியை பெற்றுள்ளது.
இந்த ஸ்கூட்டரில் பின்புறத்தில் தட்டையான தோற்றத்தை வழங்கும் எல்இடி டெயில் விளக்கு உள்ளது.
Rizta பேட்டரி மற்றும் ரேஞ்ச்
ஏதெரின் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக வந்துள்ளது. ஆரம்ப நிலை S வேரியண்ட் 2.9kWh பேக்கை மட்டுமே பெறுகிறது, Z வேரியண்ட் 2.9kWh மற்றும் 3.7kWh இரண்டையும் பெறுகிறது.
2.9kWh பேட்டரி பேக் பெறுகின்ற Rizta ஸ்கூட்டர்123km என IDC குறிப்பிட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 105 கிமீ கிடைக்கும். அதே நேரத்தில் 3.7kWh பேட்டரி பேக் பெறும் வேரியண்ட் 160km என IDC குறிப்பிட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 105 கிமீ கிடைக்கும். டாப் ஸ்பீடு 80 கிமீ ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
Ather Rizta | Rizta S | Rizta Z | Rizta Z |
மோட்டார் வகை | PMSM | PMSM | PMSM |
பேட்டரி | 2.9Kwh | 2.9kwh | 3.7kwh |
பவர் | 4.3kW | 4.3kW | 4.3kw |
டார்க் | 22 NM | 22 NM | 22 NM |
ரேஞ்சு (IDC) | 123 Km/charge | 123 Km/charge | 160Km/ch |
ரைடிங் ரேஞ்சு | 105 Km/charge | 105 Km/charge | 125km/ch |
அதிகபட்ச வேகம் | 80 Kmph | 80 Kmph | 80 Kmph |
சார்ஜிங் நேரம் (0-80%) | 6 hrs 40 Mins | 6 hrs 40 mins | 4 hrs 45 mins |
ரைடிங் மோடு | Zip and SmartEco | Zip and SmartEco | Zip and SmartEco |
Rizta சிறப்பு வசதிகள்
ரிஸ்டாவில் உள்ள பல்வேறு முக்கிய வசதிகளின் விபரம் பின்வருமாறு ;-
ஸ்கிட் கண்ட்ரோல் : இந்த வசதி ஸ்கூட்டர் நிலை தடுமாறுவதனை தடுக்கும் வகையில் சக்கரங்களில் ஸ்பீடு சென்சார் மற்றும் மோட்டாரில் உள்ள ஸ்பீடு சென்சாரும் இணைந்து செயல்பட்டு இரு சக்கரங்களும் ஒரே வேகத்தில் இயங்கி ஸ்கிட் ஆகுவதனை தடுக்க SKid control வசதி உள்ளது.
மேஜிக் ட்விஸ்ட் ; அபெக்ஸ் 450 ஸ்கூட்டரில் முதன்மையாக வெளியிடப்பட்ட மேஜிக் ட்விஸ்ட் என்பது மேம்பட்ட ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், இது ஒரு புதிய பவர் மேலாண்மை இணைக்கப்பட்டு இதற்கு ‘மேஜிக் ட்விஸ்ட்’ என அழைக்கப்படுகிறது. பிரேக் லீவர் உள்ளீடுகள் தேவையில்லாமல் ஸ்கூட்டரை முழுமையாக நிறுத்தும் அளவுக்கு இந்த சிஸ்டம் சக்தி வாய்ந்தது.
AtherStack 6 ; மிக சிறப்பான கனெக்ட்டிவ் வசதிகளை பெறும் வகையில் வாட்ஸ்ஆப், இருப்பிடம், அழைப்புகளை நிராகரிக்கும் வசதி உட்பட பல்வேறு அம்சங்களை வழங்குகின்றது.
Ather Rizta Escooter Price
ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆரம்ப விலை ரூ.1.09 லட்சத்தில் துவங்குகின்றது.
- Ather Rizta S – ₹ 1,09,000 (Range 123Km)
- Ather Rizta Z – ₹ 1,29,999 (Range 160Km)
- Ather Rizta Z – ₹ 1,49,999 (Range 123Km)
Ather Rizta on-road Price in Tamil Nadu
Model | on-Road Tamil Nadu |
---|---|
Ather Rizta S | Rs.1,17,312 |
Ather Rizta Z (2.9kwh) | Rs.1,32,561 |
Ather Rizta Z | Rs.1,52,837 |
ஏதெர் Halo ஸ்மார்ட் ஹெல்மெட்
Halo மற்றும் Halo BIT என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள ஸ்மார்ட் ஹெல்மெட்டில் ISI மற்றும் DOT தரச்சான்றிதழ் பெற்று நவீனத்துவமான பல்வேறு வசதிகளில் 2 ஸ்பீக்கர்களுடன் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், இரண்டு வாரங்களுக்கு தாக்கு பிடிக்கும் வகையிலான பேட்டரியுடன் தானாகவே ஹெல்மேட் மற்றும் ஸ்கூட்டர் இணைத்துக் கொள்ளும் வசதி இடம்பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்டில் உள்ள பேட்டரி சார்ஜ் செய்வதற்கு வயர்லெஸ் சார்ஜிங் முறையில் பெற இருக்கைக்கு அடிப்பகுதியல் உள்ள பூட் இடத்தில் வைத்தால் தானாகவே சார்ஜ் செய்து கொள்ளும்.