Automobile Tamilan

2025 பஜாஜ் சேத்தக் 35 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 பஜாஜ் சேத்தக் 35 ஆன்ரோடு விலை

பஜாஜ் ஆட்டோவின் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிதாக வந்துள்ள 35 சீரிஸ் மாடலில் 3501, 3502 மற்றும் 3503 என மூன்று வேரியண்டுகளின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

Bajaj Chetak 35 Series

ரெட்ரோ ஸ்டைலிங் அமைப்பினை கொண்டுள்ள சேத்தக் 35 சீரிஸ் மாடலில் உள்ள 3501, 3502 மற்றும் 3503 என மூன்று வேரியண்டிலும் பொதுவாக 3.5Kwh  பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக மணிக்கு 73 கிமீ வேகத்தை கொண்டுள்ளது. BLDC வகை மோட்டாரிலிருந்து 3KW தொடர்ந்து வெளிப்படுத்தும், அதிகபட்சமாக 4KW பவர் வெளிப்படுத்துகின்றது.

புதிய சேத்தக் 35 மாடல் அதிகபட்சமாக 35 லிட்டர் ஸ்டோரேஜ் வழங்கும் வகையில் பேட்டரி ஃபுளோர் போர்டிற்கு அடியில் மாற்றப்பட்டு மிகவும் பாதுகாப்பான ட்யூப்லெர் சேசிஸ் பெற்றுள்ளது.

டியூப்லெர் ஸ்டீல் சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள 2025 பஜாஜ் சேத்தக் 35 இ ஸ்கூட்டரில் முன்புறத்தில் ஒற்றை பக்க ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் அப்சார்பர் பின்புறத்தில் கொடுக்கப்பட்டு, முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்குடன், முன் சக்கரங்களின் 90/90-12 மற்றும் பின்புறத்தில் 90/100-12 பெற்று ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்தை பெறுகின்றது. இதில் 3503 மாடல் மட்டும் இரு பக்க டயரிலும் டிரம் பிரேக் கொண்டுள்ளது.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 3 ஆண்டு அல்லது 50,000 கிமீ பேட்டரி + மோட்டார் உத்தரவாதம் வழங்குகிறது.

Chetak 35 series E scooter Ex-showroom Price

டெக்பேக்கின் விலை தற்பொழுது அறிவிக்கப்படவில்லை.

2025 பஜாஜ் சேத்தக் 35 நுட்பவிபரங்கள்

Chetak Specs Chetak 3501/Chetak 3502/ Chetak 3503
மோட்டார்
வகை எலெக்ட்ரிக்
மோட்டார் வகை BLDC மோட்டார்
பேட்டரி 3.5 Kwh Lithium ion
அதிகபட்ச வேகம் 73 Km/h (63km/h w/o techpac)
அதிகபட்ச பவர் 4.0 KW Nominal/ 4.2 kw Peak
அதிகபட்ச டார்க் 16.2 Nm
அதிகபட்ச ரேஞ்சு 153Km per charge (IDC Claimed)
சார்ஜிங் நேரம் 3.25 மணி நேரம் (0-80%)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டியூப்லெர்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
ரைடிங் மோட் Eco, Sports
சஸ்பென்ஷன்
முன்பக்கம் ஒற்றைப் பக்க லிங்க்
பின்பக்கம் மோனோஷாக்
பிரேக்
முன்புறம் டிஸ்க்/டிரம்
பின்புறம் டிரம் (with CBS)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர்  90/90-12  ட்யூப்லெஸ்
பின்புற டயர்  90/100-12 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
ஹெட்லைட் எல்இடி
சார்ஜர் வகை Portable 950 W/ 650 W
கிளஸ்ட்டர் LCD/5 Inch TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர்
பரிமாணங்கள்
நீளம் 1860 mm
அகலம் 725 mm
உயரம்
வீல்பேஸ் 1330 mm
இருக்கை உயரம் 760 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 165 mm
பூட் கொள்ளளவு 35 Litre
எடை (Kerb) 135 kg

பஜாஜ் சேத்தக் 35 நிறங்கள்

வேரியண்ட் வாரியாக நிறங்கள் மாறுபட்டாலும் பொதுவாகவே சேத்தக் இ ஸ்கூட்டரில் சிவப்பு, கருப்பு, ப்ளூ, பிஸ்தா பச்சை, மற்றம் ஹாசல் நட் என 5 நிறங்கள் கிடைக்கும்.

2025 Bajaj Chetak 35 Rivals

ஏதெர் 450S, 450X, டிவிஎஸ் ஐக்யூப், ஹீரோ விடா வி2 , ஓலா எஸ்1, ஏதெர் ரிஸ்டா,  ஹோண்டா QC1, ஆக்டிவா e, ஆகியவற்றுடன் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளுகின்றது.

2025 Bajaj Chetak 35 electric Scooter on-Road Price in Tamil Nadu

2025 பஜாஜ் சேத்தக் 3501, 3502, 3503 என மூன்று ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

(All Price on-road Tamil Nadu)

(All Price on-road Pondicherry)

Faq chetak 35 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

சேத்தக் 35 சீரிஸ் எலெக்ட்ரிக் மைலேஜ் எவ்வளவு ?

சேத்தக் 3501, 3502 ஸ்கூட்டர்களின் உண்மையான ரேஞ்ச் 110-120 கிமீ வழங்கலாம்

சேத்தக் 35 ஸ்கூட்டரின் பவர் மற்றும் டார்க் விபரம் ?

3 பேஸ் BLDC மோட்டார் பொருத்தப்பட்டு பவர் 4Kw வழங்குகின்றது. டார்க் பற்றி எந்த தகவலும் இல்லை.

பஜாஜ் சேத்தக் 35 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

சேத்தக் 35 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.41 லட்சம் வரை அமைந்தள்ளது.

சேத்தக் 35 மாடலை சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம்?

சேத்தக்கில் ஃபாஸ்ட் சார்ஜி ஆப்ஷன் இல்லை, 3501 வேரியண்டில் உள்ள 950 வாட்ஸ் ஆன்-போர்டு சார்ஜரின் மூலம் 0-80 % சார்ஜ் ஏற 3 மணி நேரமும், 3502 மாடல் 3.25 மணி நேரம் தேவைப்படும்.

பஜாஜின் சேத்தக் 35 சீரிஸ் போட்டியாளர்கள் யார் ?

டிவிஎஸ் ஐக்யூப், ஓலா எஸ்1, ஏதெர் ரிஸ்டா, 450S, 450X, ஹோண்டா QC1, ஆக்டிவா e, விடா வி2 ஆகியவற்றுடன் மற்ற மின்சார பேட்டரி ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளும்.

Chetak 35 e scooter Image Gallery

Exit mobile version