இந்தியாவின் துவக்க நிலை ஸ்போர்ட்டிவ் சந்தையில் கிடைக்கின்ற யமஹா R15 மோட்டார்சைக்கிளில் உள்ள R15 V4, R15M, R15S, மோட்டோஜிபி எடிசன் ஆகிய மாடல்களின் என்ஜின், மைலேஜ், சிறப்புகள் மற்றும் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.
2025 Yamaha R15 V4
ரேசிங் பைக்குகளுக்கு இணையான செயல்திறனை வழங்குகின்ற யமஹா ஆர்15 வி4, ஆர்15எம், ஆர்15எஸ், மோட்டோஜிபி எடிசன் ஆகிய மாடல்களில் பொதுவாக பல்வேறு அடிப்படையான நுட்பவிபரங்கள், எஞ்சின் உட்பட என அனைத்தும் பகிர்ந்து கொள்ளுகின்றன.
LC4V 155cc, லிக்யூடு கூல்டு SOHC நான்கு வால்வு, சிங்கிள் சிலிண்டர் VVA பெற்ற என்ஜின் 10000rpm-ல் 18.1 bhp பவர் மற்றும் 7,500rpm-ல் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் சிலிப்பர் அசிஸ்ட் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
- Yamaha R15S – ₹ 1,55,303
- Yamaha R15 V4 (Black, RED, White) – ₹ 1,70,837
- Yamaha R15 V4 Dark Knight – ₹ 1,71,753
- Yamaha R15 V4 With Quickshifter – ₹ 1,75,430
- Yamaha R15M Metallic grey – ₹ 1,85,719
- Yamaha R15M Monster Energy Motogp – ₹ 1,87,094
- Yamaha R15M Icon Performance – ₹ 1,95,823
(ex-showroom)
Yamaha R15 V4, R15M, R15S on road Price in Tamil Nadu
2025 யமஹா R15 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, ஓசூர், புதுக்கோட்டை, தரும்புரி, நாகர்கோவில் என மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது மாறுபடும்.
- Yamaha R15S – ₹ 1,89,654
- Yamaha R15 V4 (Black, RED, White) – ₹ 2,04,875
- Yamaha R15 V4 Dark Knight – ₹ 2,05,953
- Yamaha R15 V4 With Quickshifter – ₹ 2,11,030
- Yamaha R15M Metallic grey – ₹ 2,23,543
- Yamaha R15M Monster Energy Motogp – ₹ 2,26,094
- Yamaha R15M Icon Performance – ₹ 2,34,023
(All Prices on-road Tamil Nadu)
- Yamaha R15S – ₹ 1,69,768
- Yamaha R15 V4 (Black, RED, White) – ₹ 1,85,098
- Yamaha R15 V4 Dark Knight – ₹ 1,86,986
- Yamaha R15 V4 With Quickshifter – ₹ 1,92,030
- Yamaha R15M Metallic grey – ₹ 2,04,680
- Yamaha R15M Monster Energy Motogp – ₹ 2,07,691
- Yamaha R15M Icon Performance – ₹ 2,16,975
(All Prices on-road Pondicherry)
R15 வித்தியாசங்கள்
R15 V4 பைக்கில் ஸ்பிளிட் இருக்கை, எல்இடி பை-டைரக்ஷனல் ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி, டிராக்ஷன் கண்ட்ரோல்,அப்சைடு கியர் ஷிஃப்ட் செய்ய க்விக் ஷிஃப்டர் ஆகிய வசதிகளுடன் அப்சைடு டவுன் ஃபோர்க் சஸ்பென்ஷனுடன் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் பெற்று டிராக் மோடு மற்றும் ஸ்டீரிட் மோடு பெற்றுள்ளது.
R15M மாடல் முழுமையாக ரேசிங் பைக்குகளுக்கு இணையான நிறங்களுடன் மிக நேர்த்தியாக பிரீமியம் தோற்றத்தை பெற்று கோல்டன் நிறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் கொண்டு டிஜிட்டல் கிளஸ்ட்டர் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி உள்ளது. இதே வேரியண்டின் அடிப்படையில் மோட்டோஜிபி எடிசன் கிராபிக்ஸ் பெற்றுள்ளது.
குறைந்த விலை R15S மாடலில் ஒற்றை இருக்கையுடன் பழைய இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டு நெகட்டிவ் எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் மட்டும் பெற்று கனெக்ட்டிவிட்டி வசதிகள் இல்லை. இந்த மாடல் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்றதாக உள்ளது.
இந்த பைக்கின் பரிமாணங்கள் 1990 மிமீ நீளம், அகலம் 725 மிமீ, மற்றும் உயரம் 1,135 மிமீ ஆகவும் வீல்பேஸ் 1325 மிமீ ஆக பெற்று 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட யமஹா R15 பைக்குகளின் இருக்கை உயரம் 815 மிமீ ஆகவும் 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்று மொத்த எடை 141 கிலோ ஆகும். R15 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 42-45KMPL வரை கிடைக்கின்றது.
Yamaha R15 Rivals
யமஹா நிறுவனத்தின் ஆர்15 பைக்கிற்கு போட்டியாக கரீஷ்மா XMR 210, கேடிஎம் ஆர்சி200, சுசூகி ஜிக்ஸர் SF155, SF250, கேடிஎம் ஆர்சி 160 மற்றும் பல்சர் ஆர்எஸ்200 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
2025 யமஹா R15 நிறங்கள்
ஆர்15 பைக்கின் மூன்று பிரிவுகளில் மாறுபட்ட 9 விதமான நிறங்களை பெற்றதாக உள்ளது.
FAQs யமஹா R15 V4
2024 யமஹா R15 V4 எஞ்சின் விபரம் ?
2024 யமஹா R15 V4, R15M, R15S என மூன்று பைக்கிலும் 155cc, VVA என்ஜின் 10000rpm-ல் 18.1 bhp பவர், 7,500rpm-ல் 14.2Nm டார்க் பெற்றுள்ளது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
2024 யமஹா ஆர்15எம் பைக் வேறுபாடு என்ன ?
யமஹா ஆர்15எம் ஆனது ரேசிங் உந்துத்தலை பெற்ற மாடல் மோட்டோஜிபி எடிசனும் உள்ளது.
ஆர்15 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?
யமஹா ஆர்15 பைக்கின் மைலேஜ் 42 முதல் 45 கிமீ வரை வெளிப்படுத்துகின்றது
Yamaha R15 பைக்கின் ஆன்ரோடு விலை ?
2024 யமஹா R15 பைக்கின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ரூ.1.90 லட்சம் முதல் ரூ.2.34 லட்சம் வரை கிடைக்கின்றது.
யமஹா R15 V4, R15M, R15S நுட்பவிபரங்கள்
என்ஜின் | |
வகை | லிக்யூடு கூல்டு, 4 stroke |
Bore & Stroke | 58 mm x 58.7 mm |
Displacement (cc) | 155 cc |
Compression ratio | 11.6:1 |
அதிகபட்ச பவர் | 18.4PS at 10,000 RPM |
அதிகபட்ச டார்க் | 14.2 Nm at 7,500 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | டெல்டா பாக்ஸ் |
டிரான்ஸ்மிஷன் | கான்ஸ்டென்ட் மெஸ், 6 ஸ்பீடு |
கிளட்ச் | வெட் மல்டி பிளேட் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | அப்சைடு டவுன்/டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | மோனோ ஷாக் அப்சார்பர் |
பிரேக் | |
முன்புறம் | டிஸ்க் 282 மிமீ |
பின்புறம் | டிஸ்க் 220 மிமீ |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 100/80-17M/C 52P ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 140/70R17M/C 66H ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V-4Ah MF பேட்டரி |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் |
பரிமாணங்கள் | |
நீளம் | 1990 மிமீ |
அகலம் | 725 மிமீ |
உயரம் | 1135 மிமீ |
வீல்பேஸ் | 1325 மிமீ |
இருக்கை உயரம் | 815 மிமீ |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 170 மிமீ |
எரிபொருள் கொள்ளளவு | 11 லிட்டர் |
எடை (Kerb) | 142 கிலோ |
2025 Yamaha R15 Photo Gallery
New GST 2.0 Price updated on 25/09/2025