ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர் கார் முழுவிபரம்

ஃபெராரி 458 இட்டாலியா காருக்கு மாற்றாக ஃபெராரி 488 ஜிடிபி கார் விரைவில் வரும் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தற்பொழுது விற்பனையில் உள்ள 458 இட்டாலியா காரை விட மிகவும் சிறப்பான ஆற்றலுடன் கூடிய செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய காராக ஃபெர்ராரி 488 ஜிடிபி விளங்கும்.

ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர் கார்

ஃபெராரி 488 ஜிடிபி என்றால் ஃபெராரி 488 என்பதற்கு மொத்தம் உள்ள 8 சிலிண்டரும் ஒவ்வொரு சிலண்டரின் கொள்ளளவும் 488சிசி ஆகும்.  கிரான் டூரீஸ்மோ பெர்லின்ட்டா ( GTB – Gran Turismo Berlinetta ) ஆகும்.

ஃபெராரி 488 ஜிடிபி என்ஜின்

660எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த 3.9 லிட்டர் வி8 டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 670என்எம் ஆகும்.  7 வேக இரட்டை தானியங்கி கிளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் மிகவும் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த என்ஜினாக விளங்குகின்றது.

0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு வெறும் 3 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
0 முதல் 200 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு வெறும் 8.3 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 330கிமீ ஆகும்.

488 ஜிடிபி என்ஜின் புதுவிதமான சத்தம் வெளிப்படுத்தும் வகையில் அதன் சத்தத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

வெளிதோற்றம்

458 இட்டாலியா காரை விட 50% ஏரோடைனமிக்ஸ் வடிவத்தில் 488 ஜிடிபி கார் உயர்வு பெற்றுள்ளது. அதிகப்படியான டவுன்ஃபோர்ஸ் மற்றும் குறைக்கப்பட்ட ட்ராக் ரியர் ஸ்பாய்லர் என தோற்றத்தில் மெருகேற்றப்பட்டுள்ளது. மேலும் வட்ட வடிவான எல்இடி பின்புற விளக்குகள் வடிவமைத்துள்ளனர்.

உட்ப்புறம்

டிரைவருக்கு அதிக சிரமத்தினை தராது வகையில் உருவாக்கபட்டுள்ள இருக்கை பல நவீன வசதிகள் பொழுதுப்போக்கு அம்சங்களை கொண்டுள்ளது.

வரும் ஜெனிவா மோட்டார் ஷோவில் ஃபெராரி 488 ஜிடிபி சூப்பர் கார்  பார்வைக்கு வரவுள்ளது.

Exit mobile version