Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

அதிக மைலேஜ் தரும் டாப் 5 கார்கள் – 2015

by automobiletamilan
செப்டம்பர் 6, 2015
in Wired, கார் செய்திகள், செய்திகள்

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள கார்களில் அதிக மைலேஜ் தரும் டாப் 5 கார்களின் மைலேஜ் விபரம் மற்றும் விலை விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மாருதி சியாஸ் டீசல்

அதிக மைலேஜ் தரும் முதல் 5 கார்களில் மாருதி சுசூகி நிறுவனம் மூன்று இடங்களை பெற்று விளங்குகின்றது. அதனை தொடர்ந்து ஹோண்டா இரண்டு இரடங்களை பெற்றுள்ளது.

1. மாருதி சியாஸ் டீசல்

கடந்த 1ந் தேதி விற்பனைக்கு வந்த மாருதி சுசூகி சியாஸ் SHVS டீசல் கார் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது. 88.5பிஎச்பி ஆற்றலை அளிக்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாருதி சியாஸ் டீசல் ஆன்ரோடு விலை ரூ.9.92 லட்சம் முதல் ரூ.12.70 லட்சம் விலையில் கிடைக்கின்றது.

மாருதி சியாஸ் SHVS டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 28.09கிமீ ஆகும்.

2.  மாருதி செலிரியோ

கடந்த சில மாதங்களாக மைலேஜில் முன்னிலை வகித்து வந்த செலிரியோ டீசல் சியாஸ் வரவுக்கு பின்னர் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது. சுசூகி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள 47பிஎச்பி ஆற்றலை அளிக்கும் 793சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மாருதி செலிரியோ டீசல் ஆன்ரோடு விலை ரூ.5.54 லட்சம் முதல் ரூ.6.73 லட்சம் விலையில் கிடைக்கின்றது.

மாருதி செலிரியோ டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 27.62கிமீ ஆகும்.

மாருதி செலிரியோ

3. ஹோண்டா ஜாஸ்

பிரிமியம் ரக ஹேட்ச்பேக் கார்களில் அதிக மைலேஜ் தரும் காராக விளங்கும் ஹோண்டா ஜாஸ் மூன்றாமிடத்தில் உள்ளது. ஹோண்டா ஜாஸ் டீசல் காரில் 99பிஎச்பி ஆற்றலை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஜாஸ் டீசல் ஆன்ரோடு விலை ரூ.7.63 லட்சம் முதல் ரூ.10.02 லட்சம் விலையில் கிடைக்கின்றது.

ஹோண்டா ஜாஸ் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 27.3 கிமீ ஆகும்.

ஹோண்டா ஜாஸ்
 

4. மாருதி ஸ்விஃப்ட் டிசையர்

இந்தியாவின் மிக பிரபலமான டிசையர் காரின் டீசல் மாடல் நான்காவது இடத்தினை பெற்றுள்ளது.  74பிஎச்பி ஆற்றலை அளிக்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாருதி டிசையர் டீசல் ஆன்ரோடு விலை ரூ.7.40 லட்சம் முதல் ரூ.9.10 லட்சம் விலையில் கிடைக்கின்றது.

மாருதி டிசையர் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 26.59 கிமீ ஆகும்.

மாருதி டிசையர்
 

5. ஹோண்டா சிட்டி

சியாஸ் காரின் நேரடியான போட்டி காராக விளங்கும் ஹோண்டா சிட்டி கார் ஐந்தாமிடத்தில் உள்ளது. சிட்டி காரில் 99பிஎச்பி ஆற்றலை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஜாஸ் டீசல் ஆன்ரோடு விலை ரூ.10.24 லட்சம் முதல் ரூ.14.02 லட்சம் விலையில் கிடைக்கின்றது.
ஹோண்டா சிட்டி டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 26 கிமீ ஆகும்.
ஹோண்டா சிட்டி
கொடுக்கப்பட்டுள்ள மைலேஜ் விபரங்கள் ஆராய் சோதனையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக மைலேஜ் தரும் டாப் 5 கார்களின் விலை விபரம் சென்னை ஆன்ரோடு விலையாகும்.
Top 5 Fuel efficient cars in Indian Market
Tags: Mileageகார்
Previous Post

பென்ட்லி பென்டைகா ; உலகின் மிக வேகமான எஸ்யூவி

Next Post

அடுத்தடுத்து 4 பைக்குகள் ஹோண்டா அதிரடி

Next Post

அடுத்தடுத்து 4 பைக்குகள் ஹோண்டா அதிரடி

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version