Categories: Auto NewsCar News

இசுசூ டி-மேக்ஸ் வி க்ராஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு வந்தது

இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கினை அடிப்படையாக கொண்ட அட்வென்ச்சர் மாடலான டி-மேக்ஸ் வி க்ராஸ் பிக்கப் டிரக் விலை ரூ.12.49 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கப்பட்ட்டுள்ள நிலையில் டெலிவரி ஜூலை 2016 முதல் தொடங்கும்.

isuzu-d-max-v-cross

டி மேக்ஸ் வி க்ராஸ் பிக்அப் டிரக் விற்பனையில் உள்ள செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி காரின் பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட மாடலாகும். 134 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 320Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் வழியாக 4 வீல்களுக்கும் ஆற்றலை கடத்துகின்றது.

பிரிமியம் இன்டிரியரினை கொண்டுள்ள வி க்ராஸ் மாடலில் 7.0 இஞ்ச் தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , டில்ட் ஸ்டீயரிங் போன்றவற்றை பெற்றுள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ் இபிடி , பிரேக் அசிஸ்ட் மற்றும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் போன்றவற்றை பெற்றுள்ளது.

எஸ்யூவி பிரியர்களுக்கு மாற்றான பிக்கப் டிரக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ள வி க்ராஸ் காரில் பல நவீன அம்சங்களுடன் ஆல் வில் டிரைவ் ஆப்ஷினை பெற்றுள்ளது. 16 இஞ்ச் அலாய் வீலுடன் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் டிரம் பிரேக்கினை பெற்றுள்ளது.

அட்வெனச்சருக்கு ஏற்ற சாகசமான இசுசூ டி-மேக்ஸ் வி க்ராஸ் பிக்கப் டிரக் விலை ரூ.14.29 லட்சம் ( எக்ஸ்ஷோரூம் சென்னை ).

Recent Posts

ஆடம்பர கார்களுக்கு எம்ஜி செலக்ட் டீலரை துவங்கும் ஜேஎஸ்டபிள்யூ..!

ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…

17 hours ago

160கிமீ ரேஞ்ச் வழங்கும் 2024 ரிவோல்ட் RV400 அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…

22 hours ago

இந்தியாவில் ஹோண்டாவின் 300-350cc பைக்குகள் ரீகால் அழைப்பு

கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…

1 day ago

முதல் நாளில் 1,822 முன்பதிவுகளை அள்ளிய கியா கார்னிவல்..!

கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…

1 day ago

டிரையம்ப் ஸ்பீடு T4 Vs ஸ்பீடு 400 வித்தியாசங்கள் என்ன..!

டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…

2 days ago

ரூ.84,990 விலையில் ரிவோல்ட் RV1, RV1+ இ-பைக் விற்பனைக்கு அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…

2 days ago