இந்த வருடத்தில் இந்தியளவில் எதிர்பார்க்கப்படும் 10 கார்களை பற்றி கானலாம். 40க்கு மேற்பட்ட கார்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அதிக எதிர்பார்க்கப்படும் கார்களை பார்க்கலாம்.
1. ஃபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ்யூவி
இக்கோஸ்போர்ட் கார் இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் உள்ளதாக தெரிகிறது. 4 வண்ணங்களில் எதிர்பார்க்கப்படும் ஃபோர்டு இக்கோபூஸ்ட் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.இது 1.6 என்ஜின்க்கு உண்டான ஆற்றலை வழங்கும். டீசல் வகையில் 1.5 லிட்டர் ஃபீயஸ்டா என்ஜினிலும் கிடைக்கும். பெட்ரோல் மைலேஜ் 17kmpl(ARAI Certified).
2. ஹோன்டா அமேஸ் சேடான்
ஹோன்டா நிறுவனம் முதல் டீசல் காரை களமிறக்குகிறது. அமேஸ் சேடான் கார் ப்ரீயோ காரினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. டீசர் படத்தினை தன்னுடைய இணையத்தில் வெளியிட்டுள்ளதாக முன்பே பார்த்தோம்.
3. டாடா நானோ டீசல்
டாடா நானோ சிறப்பான வெற்றி பெறவில்லை என்ற போதிலும் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு நானோ டீசலாகவும் மற்றும் சிஎன்ஜி யிலும் வெளவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4. மாருதி சுசுகி ஏ-ஸ்டார்
மாருதி சுசுகி ஏ-ஸ்டார் கார் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதே கார் இந்தியாவிலும் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
5.ஹூன்டாய் சான்டா ஃபீய்
சான்டா ஃபீய் புதிய மாடல் ஸ்போர்ட்டிவ் லுக்குடன் மாடர்ன் டேஸ்போர்ட் டிசைனுடன் வரவுள்ளதாக தெரிகிறது. மேலும் 4வீல் டிரைவ்யிலும் கிடைக்கும். 2.0 லிட்டர் சிஆர்டிஜ யில் வரலாம். பழையது 2.2 லிட்டர் என்ஜின் ஆகும்.
6. ஸ்கோடா ஆக்டிவா
ஸ்கோடா ஆக்டிவா கார் லுவாரா காருக்கு பதிலாக களமிறங்குகிறது. இதன் டீசல் 2.0 லிட்டர் என்ஜின் மற்றும் பெட்ரோல் 1.8TSI என்ஜின்யிலே வரும்.
7. செவ்ரலே என்ஜாய் MPV
செவ்ரலே என்ஜாய் MPV காரானது இறுதி கட்ட சோதனை ஓட்டத்தில் உள்ளது.7 சீட்களுடன் வெளிவரும். இதன் டீசல் என்ஜின் 1.3 லிட்டர் மற்றும் பெட்ரோல் 1. 4 லிட்டர் கிடைக்கும்.
8. நிசான் டஸ்ட்டர்
9. வோக்ஸ்வேகன் போலோ க்ராஸ்
வோக்ஸ்வேகன் போலோ க்ராஸ் கார் “மேட் ஃபார் இந்தியா” என வெளிவரவிருக்கும் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முதல் காராகும். பெட்ரோல் 1.2 லிட்டர் பெட்ரோல்
ட்ர்போ என்ஜின் மற்றும் 1.5 டீசல் என்ஜினும் கிடைக்கும். 7 ஸ்பீட் DSG ஆட்டோமொட்டிக் கியர் பாகஸ்யுடன் வரும்.
ட்ர்போ என்ஜின் மற்றும் 1.5 டீசல் என்ஜினும் கிடைக்கும். 7 ஸ்பீட் DSG ஆட்டோமொட்டிக் கியர் பாகஸ்யுடன் வரும்.
10. வோல்வா V40
வோல்வா V 40 ஹேட்ச்பேக் 2.0 லிட்டர் டீசல் என்ஜினில் வெளிவரவுள்ளது. ஆட்டோமொட்டிக் மற்றும் மேன்வல் கியர்பாக்ஸ் என இரண்டிலும் கிடைக்கும். மிகச் சிறப்பான சொகுசு தன்மை மற்றும் பாதுகாப்பு இருக்கும்.