ஜாகுவார் கார்களின் மகுடமாக விளங்ககூடிய எக்ஸ்ஜெ செடான் காரில் எக்ஸ்ஜெஆர் என்ற புதிய காரினை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த காரானது அடுத்த வாரம் நடக்கவுள்ள நியூ யார்க் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.
ஜாகுவார் எக்ஸ்ஜெஆர் காரில் ஜாகுவார் நிறுவனத்தின் மிக புகழ்பெற்ற 5.0 லிட்டர் வி 8 எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸெஃப்ஆர்எஸ் காரில் பொருத்தப்பட்ட எஞ்சினே ஆகும். அதனால் இதன் ஆற்றல் 542பிஎச்பி ஆக இருக்கலாம்.
மிக சிறப்பான சொகுசு செடான் காராக ஜாகுவார் எக்ஸ்ஜெஆர் விளங்கும். ஒரு படத்தினை மட்டும் ஜாகுவார் வெளியிட்டுள்ளது. மேலும் விபரங்கள் ஷோவில் வெளிவரும்.