ரெனோ டஸ்ட்டர் காரின் உட்ப்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பல மாறுதல்களை தந்து அசத்தியுள்ளது. இந்த கஸ்டமைஸ்க்கான செலவு ரூ 3.49 லட்சம் ஆகும்.
அசரவைக்கும் முகப்பு
எல்இடி விளக்குகள் மற்றும் புரோஜெக்டர் முகப்பு விளக்குகள், புதிய கிரில் பயன்படுத்தியுள்ளது. மேலும் டிசி என்ற முத்திரையினை பதித்துள்ளது. 10 ஸ்போக் ஆலாய் வில் பயன்படுத்தியுள்ளனர். டஸ்ட்டர் காரின் உட்ப்புறத்தினை முழுவதும் மரத்தால் இழைக்கப்பட்டுள்ளது. உட்ப்பக்க மேற்கூரை, டேஸ்போர்டு போன்றவை மரத்தால் இழைத்துள்ளனர்.
இருக்கைகள் மிக சொகுசாக மாற்றப்பட்டுள்ளது. பல வசதிகள் இருக்கைகளில் தரப்பட்டுள்ளது. இருக்கைகளை இலகுவாக மடக்க முடியும். இருக்கைகளை நமக்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்கு டிரே தொலைக்காட்சி திரை வசதி பொருத்தப்பட்டுள்ளது.
மிக நேர்த்தியான முகப்பு அசத்தலான உட்ப்புறம் என ரெனோ டஸ்ட்டர் டிசியால் உருமாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் சொகுசு கார் போன்ற பிரமிப்பை டஸ்ட்டர் ஏற்ப்படுத்துகின்றது.
உங்கள் ரெனோ காரினை டிசி மூலம் உருமாற்ற ரூ 3.49 லட்சம் ஆகுமாம்.