Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
மே 2, 2016
in கார் செய்திகள், செய்திகள்

புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா கார் ரூ.14.13 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் என இருவிதமான டீசல் என்ஜின் மாடல்கள் வந்துள்ளது.

toyota-innova-crysta-mpv

கடந்த 11 ஆண்டுகளாக 6 லட்சத்திற்க்கு மேற்பட்ட உள்ளங்களை கவர்ந்த இன்னோவா காரின் புதிய தலைமுறை மாடலே இன்னோவா க்ரீஸ்ட்டா ஆகும். இந்தியாவின் நெ.1 எம்பிவி காராக விளங்கும் இன்னோவா காரின் போட்டியாளர்கள் எர்டிகா , லாட்ஜி , மொபிலியோ , வரவிருக்கும் டாடா ஹேக்ஸா (நேரடியான போட்டியாளர்) ஆகும்.

முந்தைய மாடலை விட ரூ.4.50 லட்சம் வரை கூடுதலான தொடக்க விலையில் தொடங்கியுள்ள இன்னோவா க்ரீஸ்ட்டா காரில் பாதுகாப்பு அம்சங்கள் , புதிய நவீன வசதிகள் என பலவற்றை பெற்றுள்ள க்ரீஸ்ட்டா 7 மெனுவல் மற்றும் 3 ஆட்டோமேட்டிக் என மொத்தம் 10 விதமான வேரியண்டில் வந்துள்ளது.

150hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4லிட்டர் என்ஜின் டார்க் 343 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 2.4 லிட்டர் இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 15.10 கிமீ ஆகும்.

174hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் என்ஜின் டார்க் 360 Nm ஆகும். இதில்  6 வேக ஆட்டோமேட்டிக் இடம் பெற்றிருக்கும். 2.8 லிட்டர் இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 14.29 கிமீ ஆகும். இந்த என்ஜினில் இக்கோ , நார்மல் மற்றும் பவர் என மூன்றுவிதமான மோடினை பெற்றுள்ளது.

 

toyota-innova-crysta-seats

அனைத்து வேரியண்டிலும் 3 காற்றுப்பைகள் (Driver, Front Passenger & Driver Knee)  , ஏபிஎஸ் , இபிடி , பிரேக் அசிஸ்ட் மற்றும் ப்ரீ டென்ஸனர் இருக்கை பட்டை போன்றவை நிரந்தர அம்சமாக இனைக்கப்பட்டுள்ளது. மேலும் ZX AT/MT  போன்ற வேரியண்டுகளில் 7 காற்றுப்பைகள் ( Driver, Front Passenger, Driver Knee, Front Side, Curtain Shield Airbags ) , வாகனம் நிலைப்புதன்மை , மலையேற உதவி அமைப்பு போன்றவை அமைந்துள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா விலை பட்டியல்

வரிசை  வேரியண்ட் விபரம்  இருக்கை      எக்ஸ்ஷோரூம் விலை
1 2.4 G MT     7
   14,13,195
2 2.4 G MT    8
   14,17,695
3 2.4 GX MT    7
   15,06,057
4 2.4 GX MT    8
  15,10,557
5 2.4 VX MT    7
  17,93,084
6 2.4 VX MT    8
  17,97,584
7 2.4 ZX MT    7
  19,87,518

இன்னோவா க்ரீஸ்ட்டா ஆட்டோமேட்டிக் விலை விபரம்

வரிசை வேரியண்ட் விபரம் இருக்கை எக்ஸ்ஷோரூம் விலை
1 2.8 GX AT 7
16,36,057
2 2.8 GX AT 8
16,40,557
3 2.8 ZX AT 7
21,17,518

{ அனைத்தும் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல் }

தற்பொழுது டெல்லி மற்றும் தலைநகர் பகுதியில் இனோவா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை.

Tags: Toyotaஇன்னோவா க்ரிஸ்டா
Previous Post

2016 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ ஸ்கூட்டர் அறிமுகம்

Next Post

2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

Next Post

2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version