நிசான் மைக்ரா கார் 2014 விரைவில்

நிசான் மைக்ரா காரின் மேம்படுத்தப்பட்ட கார் தாய்லாந்தில் அறிமுகம் செய்ய உள்ளனர். ஆனால் நிசான் மைக்ரா மேம்படுத்தப்பட்ட கார் இந்தியாவில் அறிமுகம் எப்பொழுது என்பதற்க்கு தெளிவான பதில்கள் இல்லை.

Nissan Micra facelift

நிசான் மைக்ரா காரின் மேம்படுதப்பட்ட அம்சங்கள் முகப்பு கிரில், ஹனிகாம்ப் வடிவமைப்பு, மேலும் முன் மற்றும் பின்புற பம்பர்கள், புதிய முகப்பு விளக்குகள் மற்றும் பின்புற விளக்குகளில் எல்இடி, ஃபோக் விளக்குகள் போன்றவை வெளிப்புற மாற்றங்கள் ஆகும்.

உட்ப்புறத்தில் ஸ்டீரியங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சிவிட்ச்கள், கர்டையின் காற்றுப்பைகள் விரும்பினால், மற்றும் காற்று வென்ட்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

நிசான் மைக்ரா காரில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களில் கிடைக்கின்றன. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இதன் ஆற்றல் 76பிஎஸ் மற்றும் டார்க் 104என்எம் ஆகும்.  1.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இதன் ஆற்றல் 64பிஎஸ் மற்றும் டார்க் 160என்எம் ஆகும். இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

மேம்படுத்தப்பட்ட வகையில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்யில் வெளிவரலாம்.

Exit mobile version