Automobile Tamilan

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 சிறப்பு கவரேஜ்

பிஎம்டபிள்யூ  சொகுசு கார் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாகும். கடந்த வாரம் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 பேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்தது. பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் பற்றி சிறப்பு பார்வை.
2013 BMW X1

எக்ஸ் 1 எஸ்யூவி கார்கள் 2010 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சொகுசு எஸ்யூவி கார்களில் சிறப்பான விற்பனையில் தொடர்ந்து எக்ஸ்1 கார் இருக்கின்றது.தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ்1 காரில் புதிய பொலிவினை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றி முழுமையாக கானலாம்.

புதிய எக்ஸ் 1 காரில் உட்புறத்தில் சில மாற்றங்களை கொடுத்துள்ளது. உள் தோற்றத்தில் டூவல் -டோன், குரோம் பூச்சுடன் கூடிய கேபின்,கியர் லிவ்ரை சுற்றி எலெக்ட்ரோ பிளேட் பொருத்தப்பட்டுள்ளது.

வெளிதோற்றத்தில் முன்புற க்ரீல், பம்பர், டிஃபியூஸ்ர், முகப்பு விளக்குகள் போன்றவற்றில் மாற்றம் தந்துள்ளது.

சஸ்பென்ஷன் இந்திய சாலைகளுக்கு ஏற்றப்படி மாற்றியமைத்துள்ளனர்.

எக்ஸ் 1 காரில் 3 விதமான மாறுபட்ட கார்களை அறிமுகம் செய்துள்ளது.
Sdrive 20d,Sdrive 20d Sport மற்றும் Sdrive 20d Xline ஆகும்.

2.0 லிட்டர் கொள்ளவு கொண்ட டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 186PS மற்றும் டார்க் 380NM  ஆகும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர்.

2013  பிஎம்டபிள்யூ எக்ஸ்1 விலை(இந்தியா முழுமைக்கான விலை)

sDrive 20d: Rs 27.90 இலட்சம்
sDrive 20d Sport: Rs 32.5  இலட்சம்
sDrive 20d xLine: Rs 32.5  இலட்சம்


Exit mobile version