பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் GT ஸ்போர்ட் லைன் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் GT ஸ்போர்ட் லைன் சொகுசு கார் ரூ.39.90 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. GT வரிசையில் லக்சூரி லைனை தொடர்ந்து ஸ்போர்ட் லைன் இணைக்கப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் GT ஸ்போர்ட் லைன்

 GT ஸ்போர்ட் லைன் வேரியண்டில் சில வெளிதோற்ற மற்றும் உட்புறத்தில் மாற்றங்களை செய்யப்பட்டுள்ளது. கருப்பு நிற கிட்னி கிரில்  சுற்றி குரோம் பூச்சூ கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் சிகப்பு நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. டேஸ்போர்டு மற்றும் கதவுகளில் குரோம் அசென்ட் பயன்படுத்தியுள்ளனர்.

184பிஎச்பி ஆற்றலை தரவல்ல 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 380என்எம் ஆகும். 8 வேக தானியங்கி டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர்.

5 வண்ணங்களில் 3 சீரிஸ் ஜிடி ஸ்போர்ட் லைன் கிடைக்கும். பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரீஸ்மோ ஸ்போர்ட் லைன் சென்னையில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

பிஎம்டபிள்யூ 320d GT ஸ்போர்ட் லைன் விலை ரூ.39.90 லட்சம் (ex-showroom, Delhi)

பிஎம்டபிள்யூ 320d  GT லக்சூரி லைன் விலை ரூ.44.50 லட்சம் (ex-showroom, Delhi)

BMW 3 Series Gran Turismo Sport Line

Exit mobile version