Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புதிய டிசையர் கார் காத்திருப்பு காலம் மூன்று மாதங்கள்..!

by automobiletamilan
June 23, 2017
in கார் செய்திகள்

கடந்ந மே 16ந் தேதி அன்று வெளியான மாருதி டிசையர் கார் அமோகமான ஆதரவினை பெற்று சில டாப் வேரியண்ட் மாடல்களுக்கு அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு மேல் காத்திருப்பு காலம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய டிசையர் கார்

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கார்களில் மிக முக்கியமான மாடலாக பல இந்திய குடும்பங்களின் முதல் தேர்வாக அமைகின்ற மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் அடிப்படையிலான டிசையர் செடான் காரின் மூன்றாவது தலைமுறை மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்த சில நாட்களிலே 44,000 மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றிருந்தது.

டாப் வேரியன்ட் மாடல்களான VXi, VDi,  ZXi, ZDi, ZXi+ மற்றும் ZDi+ போன்றவற்றுக்கு காத்திருப்பு காலம் அதிகபட்சமாக 12 வாரங்களுக்கு மேல் காத்திருப்பு காலம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. குறிப்பாக மேல் உள்ள வேரியன்ட் வகைகளில் மாருதியின் ஏஜிஎஸ் எனப்படுகின்ற ஆட்டோமேட்டிக் கியர் ஷிஃப்ட் வசதி பெற்ற மாடலுக்கு கூடுதலான முன்பதிவு பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

புதிய HEARTECT எனும் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட டிசையர் காரில் 1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் மாடலின் பவர் 82 ஹெச்பி வெளிப்படுத்துவதுடன் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

டிசையர் பெட்ரோல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 22 கிலோமீட்டர் வழங்குவல்லதாகும்.

ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 75 ஹெச்பி பவருடன் , 190 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

டிசையர் டீசல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 28.40 கிலோமீட்டர் வழங்கவல்லதாகும்.

முழுமையான பட தொகுப்பை காண மோட்டார் டாக்கீஸ் – டிசையர்

For the latest car news, Bike news, breaking Auto news headlines and live updates in Tamil checkout automobiletamilan.com

 

Tags: Maruti Suzuki
Previous Post

ரூ. 10,000 முதல் 10 லட்சம் வரை தள்ளுபடி கார்கள் விபரம் – ஜிஎஸ்டி எதிரொலி

Next Post

0001 என்ற ஃபேன்சி நம்பர் ரூ.16 லட்சத்துக்கு ஏலம்…!

Next Post

0001 என்ற ஃபேன்சி நம்பர் ரூ.16 லட்சத்துக்கு ஏலம்...!

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version