பண்டிகை காலத்தினை முன்னிட்டு ஸ்விஃப்ட் குளோரி எடிசனை தொடர்ந்து மாருதி ஆல்ட்டோ கே10 அர்பனோ பதிப்பு வந்துள்ளது. சாதரன மாடல்களை விட ரூ.16,990 கூடுதலான விலையில் கிடைக்கும்.
புதிய பாடி கிராஃபிக்ஸ் , முகப்பு பனி விளக்குகள் , வீல் ஆர்ச் , ஓஆர்விஎம் , டெயில் விளக்குகள் , முகப்பு விளக்கு போன்றவற்றில் குரோம் பூச்சூ போன்றவை வெளிதோற்றத்தில் தரப்பட்டுள்ளது. உட்புறத்தில் கருப்பு நிற லெதர் இருக்கைகள் , ஸ்டீயரிங் வீல் கவர் , மிதியடிகள் மற்றும் புதிய பெடல்கள் போன்றவற்றை பெற்றுள்ளது.
மேலும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், புளுடூத் தொடர்பினை மொபைலில் ஏற்படுத்தி பாடல்கள் மற்றும் அழைப்பினை ஏற்கும் வசதி யுஎஸ்பி கார் சார்ஜர் மற்றும் வெப்பநிலை காட்டி என மொத்தம் 18 விதமான கூடுதல் கருவிகளை ஆல்ட்டோ கே10 காரில் பெற இயலும்.
68பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 998சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 90என்எம் . இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷனிலும் கிடைக்கும். LX, LXi, VXi மற்றும் VXi (O) மேலும் சிஎன்ஜி என அனைத்து வேரியண்டிலும் அர்பனோ சிறப்பு பதிப்பு கிடைக்கும்.
Maruti Suzuki Alto K10 Urbano Special Edition Launched