இன்று விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள மாருதி இக்னிஸ் மைலேஜ் மற்றும் என்ஜின் விபரங்களை அறிந்துகொள்ளலாம். இக்னிஸ் காரின் ஆரம்ப விலை ரூ.4.59 லட்சத்தில் தொடங்குகின்றது.

மாருதி சுசூகி பிரிமியம் நெக்ஸா டீலர்கள் வழியாக சந்தைக்கு வரவுள்ள இக்னிஸ் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இருவிதமான டிரான்ஸ்மிஷன்களில் மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் 6 விதமான வகைகளில் பெட்ரோல் மற்றும் டீசல் என இருமாடல்களும் 12 வகைகளில் 9 விதமான வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

மாருதி இக்னிஸ் என்ஜின்

1.3 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 75 ஹெச்பி பவருடன் , 190 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் (டெல்டா & ஜெட்டா) இடம்பெற்றுள்ளது.

மாருதி சுசூகி இக்னிஸ் டீசல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 26.80 கிலோ மீட்டர் ஆகும்.

பெட்ரோல் மாடலில்  1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 83 ஹெச்பி பவருடன் , 113 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் (டெல்டா & ஜெட்டா) இடம்பெற்றுள்ளது.

மாருதி சுசூகி இக்னிஸ் பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 20.89 கிலோ மீட்டர் ஆகும்.

முன்பதிவு

தற்பொழுது நெக்ஸா ஆன்லைன் மற்றும் டீலர்கள் வழியாக முன்பதிவு நடந்து வருகின்ற நிலையில் இக்னிஸ் காரின் வருகைக்கு முன்னதாகவே 4 முதல் 6 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க – இக்னிஸ் கார் பற்றிய 10 தகவல்கள்

இக்னிஸ் விலை

மிகவும் சவாலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற இக்னிஸ் காரின் ஆரம்ப விலை ரூ.4.59 லட்சத்தில் தொடங்குகின்றது . இளம் தலைமுறையினருக்கு ஏற்ற மாடலாக விளங்க உள்ள இக்னிஸ் காரின் போட்டியாளர் மஹிந்திரா கேயூவி100 ஆகும்.

மாருதி இக்னிஸ் பெட்ரோல் விலை பட்டியல்

இக்னிஸ் சிக்மா – ரூ.4.59 லட்சம்

இக்னிஸ் டெல்டா – ரூ.5.19 லட்சம்

இக்னிஸ் ஜெட்டா – ரூ.5.75 லட்சம்

இக்னிஸ் ஆல்ஃபா – ரூ.6.69 லட்சம்

பெட்ரோல் ஏஎம்டி

இக்னிஸ் டெல்டா – ரூ.5.74 லட்சம் (ஏஎம்டி)

இக்னிஸ் ஜெட்டா – ரூ.6.30 லட்சம் (ஏஎம்டி)

மாருதி இக்னிஸ் டீசல் விலை பட்டியல்

இக்னிஸ் டெல்டா – ரூ. 6.39 லட்சம்

இக்னிஸ் ஜெட்டா – ரூ. 6.91 லட்சம்

இக்னிஸ் ஆல்ஃபா – ரூ. 7.80 லட்சம்

இக்னிஸ் டீசல் ஏஎம்டி

இக்னிஸ் டெல்டா – ரூ.6.94 லட்சம் (ஏஎம்டி)

இக்னிஸ் ஜெட்டா – ரூ.7.46 லட்சம் (ஏஎம்டி)

(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )