நெக்ஸா ஷோரூமில் மாருதி சியாஸ் விற்பனை செய்யப்படும்

ஏப்ரல் 1ந் தேதி முதல் மாருதி சுசுகி சியாஸ் செடான் ரக கார் மாடல் மாருதியன் பிரிமியம் ஷோரூம் என அழைக்கப்படுகின்ற நெக்ஸா டீலர்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

ி

மாருதி சுசுகி சியாஸ்

மாருதியின் பிரிமியம் கார்களை விற்பனை செய்ய பிரத்யேகமாக தொடங்கப்பட்ட நெக்ஸா டீலர்கள் வழியாக எஸ் க்ராஸ் , பலேனோ ,பலேனோ ஆர்எஸ் மற்றும் இக்னிஸ் கார்களை தொடர்ந்து மாருதி சியாஸ் காரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நெக்ஸா கார்களின் சிறப்பு நிறமான நீல நிறுத்தை கூடுதலாக பெற்றுள்ள இந்த காரில் வேறு எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை.  வேரியன்ட்களில் நெக்ஸா கார்களில் இடம்பெறுகின்ற சிக்மா ,ஆல்ஃபா , டெல்டா மற்றும் ஜெட்டா போன்ற வேரியன்ட் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

மாருதி ஷோரூம்களில் இருப்பில் உள்ள கார்களை மட்டுமே தற்பொழுது முன்பதிவு செய்ய இயலும். இனி ஏப்ரல் 1ந் தேதி முதல் சியாஸ் கார்கள் நெக்ஸா வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. நாடு முழுவதும் 200க்கு மேற்பட்ட டீலர்களை நெக்ஸா பெற்று விளங்குகின்றது.

சியாஸ் காரில் 1.3 லிட்டர் டர்போ டீசல் DDiS 200 என்ஜின் மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனாக எஸ்ஹெச்விஎஸ் ஆப்ஷனை பெற்றதாக விளங்கும். மேலும் சியாஸ் பெட்ரோல் மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இரு மாடல்களிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் கூடுதலாக பெட்ரோல் வேரியன்டில் மட்டுமே 4 வேக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

சிக்மா ,ஆல்ஃபா , டெல்டா மற்றும் ஜெட்டா போன்ற மாடல்களை பெற்றுள்ள புதிய சியாஸ் காரில் கூடுதலாக S  வேரியன்ட் மாடலும் டீசல் என்ஜினில் பெற்றுள்ளது. இந்த மாடலானது கூடுதல் வசதிகளை பெற்ற சியாஸ் ஆர்எஸ் போன்றே அமைந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version