மெர்சிடிஸ் ஏஎம்ஜி C43 கார் விற்பனைக்கு வந்தது

1 Min Read

ரூ.74.35 லட்சம் விலையில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி C43 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏஎம்ஜி பிராண்டில் வந்துள்ள சி43 செடான் கார் சக்திவாய்ந்த எஞ்ஜினுடன் ஸ்போர்ட்டிவ் தோற்றத்தினை பெற்று விளங்குகின்றது.

இந்தியாவின் மெர்சிடிஸ்-பென்ஸ் 2016 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்துள்ள 13வது காராக விளங்கும் சி43 மாடலானது  C 200 மற்றும் C 63 S மாடலுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதிநவீன அம்சங்களுடன் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய மாடலாக சி43 விளங்கும்.

மெர்சிடிஸ் AMG C 43 எஞ்சின்

சி43 காரில் 3.0 லிட்டர் இரட்டை டர்போ சார்ஜர்கள் கொண்ட வி6 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 362 பிஎச்பி பவர், 520 நியூட்டன் மீட்டர் டார்க்கினை வெளிப்படுத்தும் .  அனைத்து சக்கரங்களுக்கும் பவரை எடுத்து செல்ல 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.  சி43 காரின் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் எட்டிவிடும்.

மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சத்தை வெளிப்படுத்தும் ஏஎம்ஜி ஸ்போர்ட்டிவ் பாடி கிட் , 18 இஞ்ச் அலாய் வீல் , ஸ்போர்ட்டிவ் இருக்கைகள் , நவீன இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் என பல அம்சங்களை கொண்டுள்ளது.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி C43 கார் விலை ரூ.74.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆகும்.

 

Share This Article
Follow:
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.