Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மெர்சிடிஸ் பென்ஸ் GLE 450 AMG கூபே விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
ஜனவரி 12, 2016
in கார் செய்திகள்

சொகுசு கார் சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முதலிடத்தை பிடித்த கையோடு மெர்சிடிஸ் பென்ஸ்  GLE 450 AMG கூபே காரை ரூ. 86.40 லட்சம் விலையில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் 12 கார்கள் மற்றும் 10 புதிய விற்பனையகம் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் அமைக்க உள்ளது.

Mercedes-Benz-GLE-450-AMG-Coupe

நேர்த்தியான பம்பர்கள் அகலமான கிரில் போன்றவற்றுடன் ஸ்போர்ட்டிவ் எல்இடி முகப்பு விளக்குகளை பெற்றிருக்கும். பக்கவாட்டில் சிறப்பான தோற்றத்தினை வழங்கும் அசத்தலான அலாய் வீல்கள் மற்றும் பின்புறத்தில் எஸ் கிளாஸ் கூபே ரக மாடலை தழுவியிருக்கின்றது.

உட்புறத்தில் ஜிஎல்இ எஸ்யூவி காரின் வசதிகளை பெருமபாலும் பெற்று விளங்குகின்றது. நாப்பா லெதர் சுற்றப்பட்ட ஸ்போர்ட்டிவ் ஸ்டீயரிங் வீல் , புதிய கமென்ட் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு மற்றும் ஏஎம்ஜி கிட் போன்றவற்றை பெற்றுள்ளது.

GLE 450 AMG கூபே மாடலில் 362Bhp ஆற்றலை வழங்கும் 3.0 லிட்டர் V6 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 520Nm ஆகும். இதில் 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் GLE 450 AMG  கார் 0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 5.7 லிநாடிகள் எடுத்துக்கொள்ளும்.  கம்ஃபோர்ட் , சிலிப்பரி , ஸ்போர்ட் , ஸ்போர்ட் + மற்றும் இன்டியூஜவல் என 5 விதமான டிரைவிங் செலக்ட் மோடினை கொண்டுள்ளது.

2016-mercedes-benz-GLE-CLASS-COUPE-interior

முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. ஜிஎல்இ 450 ஏஎம்ஜி கூபே காரின் போட்டியாளராக பிஎம்டபிள்யூ எக்ஸ்6  மற்றும் போர்ஷே கேயேன் டர்போ போன்றவை விளங்கும்.

[envira-gallery id="5421"]

Tags: GLE 450 AMGMereceds-Benzகூபே
Previous Post

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் GTE ஏக்டிவ் கான்செப்ட் அறிமுகம்

Next Post

Mercedes-Benz GLE 450 AMG Coupe Photo gallery

Next Post

Mercedes-Benz GLE 450 AMG Coupe Photo gallery

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version