மெர்சிடிஸ் E கிளாஸ் எடிசன் இ விற்பனைக்கு வந்தது

ரூ.48.60 லட்சம் விலையில் மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ் காரின் சிறப்பு E  எடிசன் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும்  இரு டீசல் என்ஜின் ஆப்ஷனில் சிறப்பு பதிப்பு கிடைக்கும்.

இ கிளாஸ் கார் உற்பத்தி செய்ய தொடங்கி 20 வருடங்கள் ஆவதனை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறப்பு பதிப்பில் பல வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முகப்பில் ஓளிரும் மெர்சிடிஸ் பென்ஸ் லோகோ , அடாப்ட்டிவ் எல்இடி முகப்பு விளக்குகள் , பின்புறத்தில் ஃபைபர் ஆப்டிக் எல்இடி டெயில் விளக்கு மற்றும் எடிசன் பேட்ஜ் இணைக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில் கமாண்டு சிஸ்டத்துடன் இணைந்த எஸ்டி கார்டு கார்மின் நேவிகேஷன் வசதி , மெர்சிடிஸ் பென்ஸ் ஆப் வசதி , ஏக்டிவ் பார்க்கிங் அசிஸ்ட் பின்புற கேமரா , 360 டிகிரி கேமரா , ஹார்மன் காரடன் 14 ஸ்பீக்கர்கள் மற்றும் பின்புற இருக்கைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றை பெற்றுள்ளது.

E200 வேரியண்டில் 184 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 4 சிலிண்டர் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 300 Nm ஆகும்.

E250 CDI வேரியண்டில் 204 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 4 சிலிண்டர் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 500 Nm ஆகும்.

E350 CDI வேரியண்டில் 260 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் V6 சிலிண்டர் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 620 Nm ஆகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் எடிசன் இ சிறப்பு பதிப்பு விலை

E200 ‘Edition E’- ரூ 48.60 லட்சம்
E250 CDI ‘Edition E’- ரூ 50.76 லட்சம்
E350 CDI ‘Edition E’- ரூ 60.61 லட்சம்

Share