மெர்சிடிஸ் GLS எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

ரூ.80.40 லட்சம் விலையில் மெர்சிடிஸ் பென்ஸ் GLS எஸ்யூவி சொகுசு எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெர்டிஸ் GLS எஸ்யூவி கார் மெர்சிடிஸ் GL காரின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும்.

முந்தைய மாடலைவிட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட ஜிஎல்எஸ் காரில் மிக அகலமான கிரில் மற்றும் ஸ்போர்ட்டிவ் பம்பர் , 3 நட்சத்திரங்களை கொண்ட மிக அகலமான மெர்சிடிஸ் பென்ஸ் லோகோ -வினை பெற்றுள்ளது. பல பீம்களை கொண்ட முகப்பு விளக்குடன் கூடிய பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்கினை பெற்றுள்ளது. பக்கவாட்டில் எந்த மாற்றங்களறும் இல்லாமல் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பம்பரினை பெற்றுள்ளது.

7 இருக்கைகளை கொண்ட மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரில் மிக சொகுசான இருக்கை அமைப்புடன் , பல நவீன வசதிகளை பெற்றுள்ள காரில் மிக அகலமான 8 இஞ்ச் தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பினை பெற்று விளங்குகின்றது.

ஏபிஎஸ் , இபிடி , இஎஸ்பி , விபத்து தடுக்க உதவி , ஆல்வில் டிராக்‌ஷன் கன்ட்ரோல் , பிரேக் அசிஸ்ட் , க்ராஸ்வின்ட் அசிஸ்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது.

 

258 hp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 620 Nm ஆகும். இதன் 9வேக ஜி-ட்ரானிக் ஆட்டோ கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.  0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 8.2 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

மெர்சிடிஸ் பென்ஸ் GLS எஸ்யூவி கார் விலை ரூ.80.40 லட்சம் (எக்ஸ்ஷோரூம் புனே)

Share