ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் ஜிஎஸ்டிக்கு பிறகு தங்களுடைய மாடல்கள் விலை ரூ. 2660 முதல் ரூ. 1.12 லட்சம் வரை விலையை குறைத்துள்ளது. குறிப்பாக விலை குறைப்பில் டூஸான் மற்றும் சான்டா ஃபீ போன்ற மாடல்கள் அதிபட்சமாக விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் கார்கள்
ஜூலை 1ந் தேதி முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை தொடர்ந்து மோட்டார் பிரிவுக்கு 28 % வரி விதிப்பில் சேர்க்கப்பட்டிருந்தாலும் , முந்தைய வரி விதிப்பை விட குறைவாக உள்ள காரணத்தால் கார் நிறுவனங்கள் அதிகபட்சமாக லட்சங்கள் முதல் சூப்பர் கார் நிறுவனங்கள் கோடிகள் வரை விலை குறைக்க தொடங்கியுள்ளன.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் தனது கார்களுக்கு அதிகபட்சமாக 5.9 % வரை விலையை குறைத்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் சான்டா ஃபீ மற்றும் டூஸான் போன்ற எஸ்யூவிகள் விலையை ரூ. 1.12 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் ஐ10 கார் ரூ. 2600 முதல்ரூ. 6000 வரையும், பிரசத்தி பெற்ற ஹூண்டாய் க்ரெட்டா அதிகபட்சமாக ரூ. 26,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.விலை குறைப்பு மாநிலங்கள் மற்றும் டீலர்கள் வாரியாக வேறுபடலாம். மேலும் அடுத்த சில வாரங்களுக்குள் ஹூண்டாய் நிறுவனம் புதிய வெர்னா செடான் காரினை அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடதக்கதாகும்.