ரூ.41.50 லட்சத்தில் அறிமுகமாகிறது பிஎம்டபிள்யூ X1 sDrive20d M ஸ்போர்ட்

இந்தியாவில் முன்புற வீல்  வெர்சனை கொன்டு X1 M ஸ்போர்ட்  கார்களை பிஎம்டபிள்யூ இந்தியா அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களின் விலை 41.50 லட்ச ரூபாய்  (எக்ஸ் ஷோரூம் விலை, டெல்லியில்). இந்த கார்கள், செயல்திறன் கொண்ட உதிரி பாகங்களுடனும், ஸ்போர்ட்  வகை கொண்டதாகவும் வெளிவர உள்ளது.

இந்த SUV-க்கள்  பெரிய ஏர்வென்ட் உடன் கூடிய  பிராண்ட் பம்பர் மற்றும் ரியர் பம்பர் இதில் மேம்படுத்தப்பட்ட டிபியூஸர்  ஆகியவற்றை உள்ளடக்கிய எம் ஏரோடைனமிக்ஸ் பேக்கேஜ்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதுமடடுமின்றி ஸ்போர்ட்ஸ் LED கரோனா ரிங்  ஹெட்லைட்கள், இதில் பகலிலும் எரியும் LED லைட்கள், கிளாஸி பிளாக் சிக்நேட்ச்சர் பிஎம்டபிள்யூ கிரில், M லோகோ மற்றும் டோர் சில்ஸ், சைடு ஸ்கிர்ட்ஸ், சைடு கிளாட்டிங்  போன்றவைகளும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கார் 18 இன்ச் டூயல் -டோன் அலாய் வீல்கிளை கொண்டது.

பிஎம்டபிள்யூ X1 sDrive20d M ஸ்போர்ட் காரின் கேபின் உள்பகுதியில் பல்வேறு ஆடம்பர வசதிகளையும், நவீன தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது.  அவைகள் , டூயல்-டோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், மல்டி பங்ஷன் ஸ்போர்ட் ஸ்டேரிங் வீல், இந்த ஸ்டேரிங் வீல் பிரிமியம் லெதர் கொண்டு கவர் செய்யப்பட்டது உள்ளது iDrive உடன் கூடிய  6.5 இன்ச் டச்ஸ்கிரின் இன்போடெய்ன்மெண்ட் சிஸ்டமும் பொருத்தப்பட்டு உள்ளது . மேலும் இதில் இடம் பெற்றுள்ள பிஎம்டபிள்யூ அப்ளிகேஷன் மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்றவை இந்த காரின் ஆடம்பரத்தை மேலும்  ஆடம்பரமாக்கியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த கார்களில்  6 ஏர்பேக்ஸ், ABS மற்றும் பிரேக் அசிஸ்ட், டைனமிக் ஸ்டாப்பிலிட்டி கண்ட்ரோல், ட்ரக்ஸன்  கண்ட்ரோல் போன்றவை இடம் பெற்றுள்ளன. BMW X1 sDrive20d M ஸ்போர்ட் கார்களில்,  2.0 லிட்டர் நான்கு -சிலிண்டர் , டர்போசார்ஜ்டு   டீசல்  மோட்டார், இது 8 ஸ்பீடு  ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்  உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின்  187 bhp உச்சபட்ச ஆற்றலில் 4,000 rpm மற்றும் 400 Nm   உச்சபட்ச டார்க்யூ வில் 1,750rpm மற்றும் 2,500rpm க்கு இடைப்பட்ட இயக்கத்தை வெளிபடுத்தும்.

Exit mobile version