Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.54,000 விலை சரிந்த நிசான் மைக்ரா சிவிடி கார்

by MR.Durai
17 June 2016, 9:46 pm
in Auto News, Car News
0
ShareTweetSend

நிசான் மைக்ரா சிவிடி கியர்பாக்ஸ் மாடல் ரூ.54,000 வரை விலை சரிந்து ரூ.5.99 லட்சத்தில் மைக்ரா XL  வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் விலை மலிவான ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பைக் காராக மைக்ரா விளங்கும்.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள நிசான் மைக்ரா ஹேட்ச்பேக் கார்களான ஸ்விஃப்ட் , எலைட் ஐ20 , போலோ மற்றும் புதிய வரவான மாருதி பலேனோ போன்ற மாடல்களுடன் சந்தையை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்திய சந்தையில் பெரிய அளவிலான வரவேற்பினை பெறவிட்டாலும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி கார் சந்தையில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.

ரூ.6.53 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த மைக்ரா XL சிவிடி வேரியண்ட் தற்பொழுது ரூ.54,000 குறைந்து ரூ.5.99 லட்சத்திற்கு கிடைக்கும். மற்றொரு வேரியண்டான மைக்ரா XV சிவிடி ரூ. 46,000 விலை குறைந்து ரூ. 6.73 லட்சத்தில் (முந்தைய விலை ரூ.7.13 லட்சம்) கிடைக்கும். விலை குறைப்புக்கு முக்கிய காரணம் உள்நாட்டிலே சிவிடி காருக்கான பாகங்கள் தயாரிக்க தொடங்கியதாகும்.

விலை குறைப்பு பற்றி நிசான் இந்திய பிரிவு நிர்வாக இயக்குநர் திரு.அருன் மல்கோத்ரா கூறுகையில் மைக்ரா சிவிடி காரில் சிறப்பான நவீன தொழில்நட்பம் , பெர்ஃபாமென்ஸ் போன்றவற்றை வழங்க்ககூடிய பிரிமியம் ஹேட்ச்பேக் காராகும். மேலும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட காராகவும் சவாலான விலையில் அதிகப்படியான மைலேஜ் வெளிப்படுத்தும் மாடலாகவும் சிறந்த பயண அனுபவத்தினை வழங்கும் காராக விளங்கும் என கூறியுள்ளார்.

மைக்ரா சிவிடி காரில் பொருத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 76bhp ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றும் இழுவைதிறன் 104Nm வெளிப்படுத்தும். நிசான மைக்ரா சிவிடி மைலேஜ் லிட்டருக்கு 19.34 கிமீ ஆகும்.

மைக்ராசிவிடி காரில் உள்ள சில முக்கிய வசதிகள் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் புஸ் பட்டன் , ஸ்டீயரிங் வீல் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான் ,ஸ்பீடு சென்சிங் கதவு லாக், முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , இஎஸ்பி  (Electronic Stability Program – ESP)  இபிடி (Electronic Brakeforce Distribution -EBD) , ஏபிஎஸ் ( Anti-lock Braking System – ABS ) மற்றும் பிரேக் அசிஸ்ட் போன்றவை உள்ளது.

நிசான் மைக்ரா சிவிடி விலை பட்டியல்

மைக்ரா XL சிவிடி – ரூ.5.99 லட்சம்

மைக்ரா XV சிவிடி –  ரூ.6.73 லட்சம்

( விலை டெல்லி எக்ஸ்ஷோரூம் )

 

Related Motor News

Upcoming Nissan Cars: இரண்டு எஸ்யூவி, ஒரு எம்பிவி என மூன்று கார்களை வெளியிடும் நிசான் இந்தியா

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

எம்பிவி, எஸ்யூவி என இரண்டு கார்களை வெளியிடும் நிசான்

ஹோண்டா உடன் இணைப்பு முயற்சியை நிசான் கைவிட்டதா..?

நிசான், ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி கூட்டணி..!

2024 மேக்னைட் ஏற்றுமதியை துவங்கிய நிசான் இந்தியா..!

Tags: Nissan
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

all new hyundai venue

ஹூண்டாய் புதிய வெனியூ எஸ்யூவி அறிமுகத்துடன் முன்பதிவு துவங்கியது

tata sierra suv

டாடா சியரா எஸ்யூவி அறிமுகத்திற்கு முன்பாக தெரிய வேண்டியவை.!

காரன்ஸ் கிளாவிஸ் EVல் புதிய வேரியண்டுகளை வெளியிட்ட கியா

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

மேக்னைட்டில் கூடுதலாக ஏஎம்டி ஆப்ஷனிலும் சிஎன்ஜி வெளியிட்ட நிசான்

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது

மேம்படுத்தப்பட்ட லெக்சஸ் LM 350h இந்தியாவில் அறிமுகம்

ரூ.64.90 லட்சத்தில் புதிய மினி JCW கன்ட்ரிமேன் All4 இந்தியாவில் அறிமுகம்

ஹூண்டாயின் ரூ.8 லட்சத்தில் வரவுள்ள 2026 வெனியூ படங்கள் கசிந்தது

எம்ஜி இந்தியாவின் புதிய வின்டசர் EV இன்ஸ்பையர் எடிசன் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan