Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ. 7 லட்சம் விலை குறைக்கப்பட்ட லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி

by automobiletamilan
February 21, 2017
in கார் செய்திகள்

2016 ஆம் ஆண்டு ரூ.56.50 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி காரின் பெட்ரோல் மாடல் விலை ரூ. 7 லட்சம் வரை குறைக்கப்பட்டு ரூ.51 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி

விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலே விலை குறைக்கப்பட்டுள்ள பெட்ரோல் மாடல் சில குறிப்பிட்ட காலத்திற்க்கு மட்டுமே இந்த விலையில் தொடரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு வசதிகளை கொண்டுள்ள டிஸ்கவரி ஸ்போர்ட் கொண்டுள்ளது.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆற்றல் 237 hp மற்றும் இழுவைதிறன் 340Nm ஆகும். இதில் 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்இடம்பிடித்துள்ளது.

5 + 2 என மொத்தம் 7 இருக்கைகளை பெற்றுள்ள லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் கார் 600மிமீ தண்ணீரிலும் மிக எளிதாக பயணிக்க முடியும் வல்லமை கொண்ட டிஸ்கவரி ஸ்போர்ட் காரில் சேறு , கல் , சகதி , ஜல்லி , மனல் என எவ்விதமான சாலைகளிலும் பயணிக்க இயலும்.

மேலும் 7 காற்றுப்பைகள் ரோல் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் , ஹீல் டீஸன்ட் கன்ட்ரோல் ,டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் , டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் , எலக்ட்ரானிக் டிராக்‌ஷன் கன்ட்ரோல் போன்ற சிறப்பம்சங்கள் அனைத்து வேரியண்டிலும் உள்ளது.

8 இஞ்ச் தொடுதிரை அமைப்பு , 17 ஸ்பீக்கர்களை கொண்ட பிரிமியம் மெரிடியன் சவூண்ட் சிஸ்டம் , பின்புற இருக்கைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் போன்ற பல விதமான நவீன அம்சங்களை கொண்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மற்றும் வால்வோ எக்ஸ்சி60 , மெர்சிடிஸ் ஜிஎல்இ மற்றும் ஆடி க்யூ5 போன்ற எஸ்யூவி கார்களுக்கு சவலாக டிஸ்கவரி ஸ்போர்ட் விளங்கும்.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் விலை ரூ.51 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்)

Tags: டிஸ்கவரி ஸ்போர்ட்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version