தொடக்கநிலை ஹூண்டாய் இயான் ஸ்போர்ட்ஸ் எடிசன் கார் ரூபாய் 3.88 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. 6.2இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இயான் பெற்றுள்ளது.

இயான் ஸ்போர்ட்ஸ் எடிசன்

  • எரா பிளஸ் மற்றும் மேக்னா பிளஸ் என இரு வேரியன்டில் விற்பனைக்கு வந்துள்ளது.
  • எஞ்சின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.
  • 6.2 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

தொடக்கநிலை பிரிவு ஹேட்ச்பேக் கார்களில் முதன்மையான ஆல்டோ 800 காருக்கு போட்டியாக அமைந்திருந்த இயான் மாடலுக்கு சவாலாக ரெனோ க்விட் மற்றும் ரெடி-கோ போன்ற மாடல்கள் மிகுந்த சவாலை ஏற்படுத்தி வருகின்றது.

இயான் காரில் 55 hp ஆற்றலையும் 74.5 Nm டார்க்கையும் வழங்கும் 0.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது.

ஸ்போர்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள காரில் தோற்ற அமைப்பில் பாடி கிராபிக்ஸ் மற்றும் மேற்கூறை ரெயில்கள் பெற்றிருப்பதுடன், இன்டிரியரில் 6.2 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றிருப்பதுடன் ஸ்மார்ட்போன் ஆதரவினை பெற்றதாக வந்துள்ளது. டூயல் டோன் நிறத்துடன், பக்கெட் இருக்கைகள் போன்றவற்றுடன் அமைந்துள்ளது.

இயான் ஸ்போர்ட்ஸ் எடிசன் விலை விபரம்
  • Era+ Sports Edition (Solid) – ரூ. 3.88 லட்சம்
  • Era+ Sports Edition (Metallic) – ரூ. 3.92 லட்சம்
  • Magna+ Sports Edition (Solid) – ரூ. 4.14 லட்சம்
  • Magna+ Sports Edition (Metallic) – ரூ. 4.18 லட்சம்

( அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை )