சிஎன்ஜி மூலம் இயங்கும் ஹோண்டா அமேஸ் செடான் கார் ரூ.5.99 லட்சம் விலையில் விற்பனைக்கு ஹோண்டா கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அமேஸ் காரில் எஸ் ப்ளஸ் வேரியண்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ள மாடலில் சிஎன்ஜி உபகரணத்தினை பொருத்தியுள்ளது.
இந்த புதிய வேரியண்ட் சிஎன்ஜி விற்பனையில் உள்ள மாநிலங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். சிஎன்ஜி பொருத்தப்பட்ட மாடலுக்கு சிறப்பான வகையில் என்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 வருட வாரண்டியை ஹோண்டா அளிக்கின்றது.
அமேஸ் காரில் பொருத்தப்பட்டுள்ள சிஎன்ஜி உபகரணத்தின் விலை ரூ. 54,315 ஆகும். அமேஸ் சிஎன்ஜி கார் விலை ரூ.5.99 லட்சம் ஆகும். (ex-showroom)