Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹோண்டா WR-V கார் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
March 16, 2017
in கார் செய்திகள்

இந்தியாவில் ஹோண்டா WR-V கார் ரூ.7.75 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டபிள்யூஆர்-வி கார் மிகவும் கவர்ச்சிகரமான தோற்ற அமைப்பினை பெற்ற க்ராஸ்ஓவர் ரக மாடலாகும்.

 

ஹோண்டா WR-V

  • ரூ.7.75 லட்சம் ஆரம்ப விலையில் ஹோண்டா WR-V கார் கிடைக்கின்றது.
  • பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனை பெற்றதாக WR-V கார் கிடைக்கின்றது.
  • ஏபிஎஸ் , இபிடி , டூயல் ஏர்பேக் அனைத்து வேரியன்டிலும் உள்ளது.
  • 7 அங்குல தொடுதிரை டிஜிபேட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றிருக்கின்றது.

டிசைன்

மிக நேர்த்தியான டிசைனை பெற்று க்ராஸ்ஓவர் ரக மாடலுக்கு ஏற்ற வகையிலான அமைப்புடன் விளங்குகின்ற இந்த காரில் முகப்பு விளக்கில்அமைந்துள்ள கருப்பு இன்ஷர்ட் , வட்ட வடிவத்தை பெற்ற பனி விளக்கு போன்றவற்றை பெற்றுள்ளது.

பக்கவாட்டில் உயரமான வீல் ஆர்ச் , பாடி கிளாடிங் , நேர்த்தியான 16 அங்குல அலாய் வீலை கொண்டுள்ளது. பின்புறத்தில் மிக நேர்த்தியான டெயில் விளக்கினை பெற்று சிறப்பான வடிவம் பெற்ற பம்பரினை கொண்டதாக விளங்குகின்றது.

ஜாஸ் காரின் அடிப்படை பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய க்ராஸ்ஓவர் ரக மாடலின்  நீளம் 3999மிமீ , அகலம் 1734மிமீ மற்றும் உயரம் 1601மிமீ ஆகும். இந்த காரின் இரு சக்கரங்களுக்கு இடையில் கொடுக்கப்பட்டுள்ள வீல்பேஸ் 2555மிமீ ஆகும்.

வெள்ளை , கோல்டு பிரவுன் , மாடர்ன் ஸ்டீல் , சில்வர் , சிவப்பு மற்றும் புதிதாக பிரிமியம் ஆம்பெர் என்ற நிறத்துடன் சேர்த்து மொத்தம் 6 நிறங்களில் கிடைக்க உள்ளது.

இன்டிரியர்

ஜாஸ் காரின் இன்டிரியர் தாத்பரியங்களை பெற்றுள்ள டபிள்யூஆர்-வி காரின் உட்புறத்தில் மிக சிறப்பான இடவசதியை தரும் வகையில் 2555மிமீ வீல்பேஸ் பெற்றுள்ள இந்த காரின் பூட் 363 லிட்டர் கொள்ளளவு பெற்று ஜாஸ் காரை விட 9 லிட்டர் கூடுதலாகும்.

டேஸ்போர்டின் அமைப்பில் மிக அகலமான 7 இஞ்ச் டிஜிபேட் தொடுதிரை அமைப்பில் நேவிகேஷன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகளுடன் விளங்குகின்றது.  மேலும் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் , சூரிய மேற்கூறை , ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் , ஸ்டியரீங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் பொத்தான்கள் மற்றும் டீசல் கார் மாடலில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. கருப்பு, சில்வர் கலவை மற்றும் கருப்பு, நீலம் என இருவிதமான வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

என்ஜின்

89 பிஹெச்பி ஆற்றலுடன் 109 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்ப்பெற்றுள்ளது.

  • பெட்ரோல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.5 கிமீ ஆகும்.

99 பிஹெச்பி ஆற்றலுடன் 200 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர்  i-DTEC டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

  • டீசல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 25.5 கிமீ ஆகும்.

வசதிகள் 

உயர் ரக மாடலில் வேரியன்டில் எல்இடி உடன் இணைந்த ஹெட்லேம்ப் , இருவிதமான நிறம் கொண்ட அப்ஹோல்ஸ்ட்ரி , ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் , பார்க்கிங் கேமரா ,  சூரிய மேற்கூறை , ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் , ஸ்டியரீங் மவுன்டேட் கன்ட்ரோல் மற்றும் டீசல் காரில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது.

முன்பகத்தில் இருகாற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி  போன்றவை அனைத்து வேரியன்டிலும் கிடைக்க உள்ளது.

போட்டியாளர்கள்

க்ராஸ் போலோ ,  அர்பன் க்ராஸ், ஐ20 ஏக்டிவ் மற்றும்  எட்டியோஸ் க்ராஸ் போன்ற மாடல்களுடனும் கூடுலாக காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களான விட்டாரா பிரெஸ்ஸா, ஈகோஸ்போர்ட் போன்றவற்றுடனும் சந்தையை பகிர்ந்து கொள்ள உள்ளது.

விலை பட்டியல்

பெட்ரோல்

  • S: 7.75 லட்சம்
  • VX: 9 லட்சம்

டீசல்

  • S: 8.79 லட்சம்
  • VX: 10 லட்சம்

ஹோண்டா டபிள்யூஆர்-வி கார் படங்கள்

[foogallery id=”16161″]

Tags: HondaWR-V
Previous Post

2017 புதிய டொயோட்டா கரோல்லா அல்டிஸ் விற்பனைக்கு வந்தது

Next Post

பிஎம்டபிள்யூ கார்களின் விலை 2% உயர்வு

Next Post

பிஎம்டபிள்யூ கார்களின் விலை 2% உயர்வு

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version