Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

அக்டோபர் மாதத்தில் அதிக விற்பனையான ஹூண்டாய் கார் எது தெரியுமா?

by MR.Durai
7 November 2018, 10:32 am
in Car News
0
ShareTweetSend

ஹூண்டாய் நிறுவன கார்களில் அக்டோபர் மாதத்தில் அதிக விற்பனையாகும் காராக 2018 சாண்ட்ரோ கார்கள் மாறியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த அக்டோபர் மாத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் மொத்தமாக 520001 யூனிட் கார்களை வ்ரிப்னியா செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 49,588 கார்கள் மட்டுமே விற்பனை செய்து இருந்தது. இந்தாண்டில் பதிவான விற்பனை உயர்வு 4.9 சதவிகிதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபர் 23ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது முதல் புதிய ஹூண்டாய் சாண்ட்ரோகளில் 8500 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று ஹூண்டாய் நிறுவனம் உறுதி செய்துள்ளது. வெறும் 22 நாட்களில் 28,800 புக்கிங் செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து பேசிய ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவன தேசிய விற்பனை பிரிவு தலைவர் விகாஸ் ஜெயின், ஹூண்டாய் நிறுவனம் விற்பனையில் புதிய உச்சத்தை எட்டியுளது. இதற்கு இந்த கார்களுக்கு ஏற்படுள்ள வலுவான டிமாண்டே காரணம். புதிய சாண்ட்ரோ கார்கள் மொத்தமாக 8500 யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளதோடு, ஹூண்டாய் நிறுவனம் டன் தவுசாண்ட் கிளப்-பில் நுழைய கிரேட்டா, i20 மற்றும் கிராண்ட் i10 கார்களும் உதவியுள்ளன என்றார்.

புதிய சாண்ட்ரோ கார்களில், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களுடன் ஆண்டிராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் மிரார் லிங்க் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ரியர் பார்க்கிங் கேமரா, கீலெஸ் என்ட்ரி, நான்கு ஜன்னல்களும் பவர் விண்டோ வசதிகளை கொண்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரை புதிய சாண்ட்ரோ கார்களில் டிரைவர் சீட் ஏர்பேக்ஸ் மற்றும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்களுடன் எலெக்ட்ரானிக் பிரேக்-போர்ஸ் அழுத்தம் போன்றவற்றை கொண்டிருக்கும். டாப் ஸ்பெக் வகைகளில் டூயல் ஏர்பேக்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் இன்பெக்ட் சென்சிங் ஆட்டோ டோர் அனலாக் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது.

மெக்கனிக்கல் வசதிகளை பொறுத்த வரை புதிய சாண்ட்ரோ கார்களில் 1.1 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 68bhp மற்றும் 5500rpm-ல் இயங்கும். மைலேஜ்-ஐ பொறுத்தவரை 20.3kmpl-ஆக இருக்கும். மெனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன்கள் இரண்டிலும் ஒரே மைலேஜ் கிடைக்கும்,

Related Motor News

மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ஜிஎஸ்டி 2.0 உட்பட ரூ.2.56 லட்சம் வரை தள்ளுபடி

ஃபிளிப்கார்ட்டில் ராயல் என்ஃபீல்டு 350cc பைக்குகளை வாங்கலாம்.!

ஜிஎஸ்டி 2.0 எதிரொலி., சுசூகி ஸ்கூட்டர்கள், பைக்குகள் விலை குறைப்பு

புதிய டாடா ஏஸ் கோல்டு+ டீசல் டிரக்கிற்கு DEF ஆயில் தேவையில்லை.!

டிவிஎஸ் XL 100 மொபெட்டில் அலாய் வீலுடன் டீயூப்லெஸ் டயர் வெளியானது

புதிய நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் XP வெளியானது

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tata altroz 2025 bncap saftey ratings

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan