Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Auto NewsCar News

மஹிந்திரா இ-வெரிட்டோ விற்பனைக்கு வந்தது

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 2,June 2016
Share
2 Min Read
SHARE

மின்சார கார்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் மஹிந்திரா இ-வெரிட்டோ மின்சார கார் ரூ.9.50 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் இ-வெரிட்டோ எலக்ட்ரிக் கார் கிடைக்கும்.

வெரிட்டோ செடான் காரின் தோற்றத்திலே அமைந்துள்ள இவெரிட்டோ தோற்ற அமைப்பிலும் உட்புறத்திலும் பெரிதாக எந்த மாற்றிதினையும் பெறவில்லை.  72 வோல்ட் லித்தியம் ஐன் பேட்டரியின் மூலம் மின்சாரம் சேமித்து வைத்து மூன்று பேஸ் இன்டக்‌ஷன் ஏசி மோட்டார் மூலம் ஒற்றை வேக டிரான்ஸ்மிஷனுடன் இயங்குகின்றது. கிளட்ச் இல்லாத மாடலாகும்.

41 hp திறன் மற்றும்  91 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் வகையில் இதன் செயல்திறன் அமைந்துள்ளது.

ஒருமுறை முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு 8.45 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.. வேகமான சார்ஜிங் முறையின் வாயிலாக 80 சதவீத சார்ஜ் வெறும்  1.45 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிவிடும்.   ஆனால் இது மஹிந்தாவின் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையத்தில் மட்டுமே சாத்தியம். முழுமையான சார்ஜ்யில் 110 கிமீ வரை பயணிக்க இயலும். மஹிந்திரா இ-வெரிட்டோ மின்சார காரின் உச்ச வேகம் மணிக்கு 86 கிமீ ஆகும்.

1 கிமீ பயணிக்க வெறும் ரூ. 1.15 பைசா மட்டுமே தேவைப்படும். மாசு உமிழ்வு என்ற பிரச்சனை இல்லாமல் மின்சாரத்தில் இயங்கும் காராக இவெரிட்டோ செயல்படும்.

D2 , D4 மற்றும் D6 என  மொத்தம் மூன்று விதமான வேரியண்டில் எலக்ட்ரிக் வெரிட்டோ கார் கிடைக்கும்.

D2 பேஸ் வேரியண்டில் ரீஜெனரேட்டிவ் சிஸ்டம் , வாகன பழுதினை கண்டுபிடிக்கும் அமைப்பு , ஈக்கோ மற்றும் பூஸ்ட் மோட் , REVIVE என்பது குறைவான பேட்டரி உள்ள சமயத்தில் 8 கிமீ வரை பயணிக்க உதவும் அமைப்பு என பலவற்றை பெற்றுள்ளது.

D4 வேரியண்டில்  D2 வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக அலாய் வீல் , இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ரிமோட் லாக் , கீலெஸ் என்ட்ரில் எலக்ட்ரிக் ஓஆர்விஎம் மற்றும் ஃபாலோ மீ முகப்பு விளக்கினை பெற்றுள்ளது.

More Auto News

ரிவர்ஸ்யில் மட்டுமே கார் ஓட்டும் இந்தியர்
டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் GX (O) விற்பனைக்கு வந்தது
புதிய மஹிந்திரா தார் எஸ்யுவி விற்பனைக்கு வந்தது
ரோல்ஸ்ராய்ஸ் விஷன் நெக்ஸ்ட் 100 கான்செப்ட் – எதிர்கால கனவு மாளிகை
ஹீரோ மோட்டோகார்ப் இப்பொழுது ஆப்பரிக்காவில்

D6 டாப் வேரியண்டில் D4 வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக  ஃபாஸ்ட் சார்ஜிங் அமைப்பு உள்ளது.

மஹிந்திரா இ-வெரிட்டோ விலை பட்டியல்

e-Verito D2- ரூ. 9.50 lakhs
e-Verito D4 – ரூ. 9.75 lakhs
e-Verito D6 – ரூ. 10 lakhs
(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )

இந்திய அரசின் FAME  (Faster Adoption and Manufacturing of Electric Vehicles in India) திட்டத்தின் கீழ் சலுகை பெற முடியும். மஹிந்திரா ரேவா e20 காரினை தொடர்ந்து 2வது மாடலாக இவெரிட்டோ வந்துள்ளது.

2025 skoda Enyaq electric car
இந்தியா வரவுள்ள 2025 ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் அறிமுகமானது.!
ரூ.38.60 லட்சத்தில் பிஎம்டபிள்யூ 320d எடிஷன் ஸ்போர்ட் களமிறங்கியது
ரெடி-கோ vs க்விட் vs ஆல்ட்டோ 800 vs இயான் – ஒப்பீடு
டாடா டியாகோ விலை ரூ.3.30 லட்சத்தில் தொடக்கம்
குறைந்த விலை ரெனால்ட் கிகர் RXT(O) விற்பனைக்கு வந்தது
TAGGED:Mahindra
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 honda activa 125
Honda Bikes
2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ola roadster x electric
Ola Electric
ஓலா ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
harley x440 bike specs and on-road price
Harley-Davidson
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கின் விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350
Royal Enfield
2024 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved