Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

மாருதி இக்னிஸ் எஸ்யூவி கார் – முதல்பார்வை விமர்சனம்

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 13,January 2017
Share
4 Min Read
SHARE

80 களில் பிறந்த இளைய தலைமுறையினரை மையமாக கொண்டு புதிய மாருதி இக்னிஸ் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாருதி சுசூகி இக்னிஸ் கார் – முதல்பார்வை விமர்சனம் இதோ…!

முதன்முறையாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி வாயிலாக நேரடியான தரிசனத்தை இந்தியாவில் ஏற்படுத்திய மாருதி சுசூகி இக்னிஸ் சந்தைக்கு தற்பொழுது வெளியாகியுள்ளது. மாருதியின் நெக்ஸா என அழைக்கப்படும் பிரத்யேக பிரிமியம் ஷோரூம் வழியாக விற்பனைக்கு வந்துள்ள மூன்றாவது மாடலாகும்.

மாருதி இக்னிஸ் டிசைன்

70 மற்றும் 80 களில் விற்பனையில் இருந்த சுஸூகி நிறுவனங்களின் கார் மாடல்களின் வடிவ தாத்பரியங்களை கொண்டு மிக நேர்த்தியான நவீன காலத்துக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்ட மாடலே மாருதி இக்னிஸ் ஆகும்.

1971 ஆம் ஆண்டில் விற்பனையில் இருந்த சுஸூகி ஃபிரென்டீகூபே ரக மாடலின் பக்கவாட்டில் சி பில்லர் அருகே அமைந்த அதே சிலைட்ஸ் 3 கோடுகளை இக்னிஸ் காரில் சேர்த்துள்ளது.

1976 ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த முதல் தலைமுறை சுசூகி செர்வோ காரின் முன்பக்க ஹெட்லைட் டிசைனை நவீன தன்மைக்கு ஏற்ப மாற்றி U வடிவ ஆங்கில எழுத்து போன்ற அமைந்த பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளது.

முதல் தலைமுறை சுசூகி விட்டாரா எஸ்யூவி காரின் தோற்றத்தின் ஃபென்டர் தாத்பரியங்களை கொண்டு இக்னிஸ் காரின் ஃபென்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் உள்ள முதல் தலைமுறை ஸ்விஃப்ட் காரினை போன்றே ஏ மற்றும் பி பில்லர்களில் கருப்பு வண்ணத்துடன் கூடிய பில்லர்களை சேர்த்து அசத்தியுள்ளது.

More Auto News

ரூ. 9.70 லட்சத்தில் மஹிந்திரா TUV300 பிளஸ் விற்பனைக்கு வரவுள்ளது
இந்தியாவில் மூன்றாவது எலெக்ட்ரிக் சியூவி காரை வெளியிட தயாராகும் எம்ஜி மோட்டார்
வால்வோ C40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் கூபே எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்
ஆகஸ்ட் 15.., மஹிந்திரா தார் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகமாகிறதா ?
புதிய ஆடி Q7 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

தனது கிளாசிக் டிசைன் தாத்பரியங்களை மூலதனமாக கொண்ட நவீன யுகதிகளுக்கு ஏற்ற வடிவில் உருவாக்கும் நோக்கிலே வடிவமைக்கப்பட்டுள்ள காம்பேக்ட் மினி எஸ்யூவி மாடலின் முன்பக்க தேன்கூடு கிரில் மாருதி 800 காரின் கிரிலை நினைவுப்படுத்துகின்றது.

 காரின் முன்புறம்

முன்பக்கத்தில் அமைந்துள்ள அசத்தலான தேன்கூடு கிரிலில் அமைந்துள்ள க்ரோம் ஸ்டிரிப் மத்தியில் அமைந்துள்ள சுசூகி லோகோ வாகனத்தினை கவர்ச்சியை அதிகரிக்கின்றது. புராஜெக்டர் முகப்பு விளக்கில் அமைந்துள்ள U-வடிவ எல்இடி ரன்னிங் விளக்கு மிக சிறப்பான டிசைனை எஸ்யூவி கார்களுக்கு உரித்தமான வளமையான கம்பீரத்தை வழங்குகின்றது.

முன் பம்பரில் அமைந்துள்ள வட்ட வடிவ பனி விளக்கை சுற்றிய க்ரோம் பூச்சூ ஏர் டேம் கிரில் போன்றவை சிறப்பாகவே அமைந்துள்ளது.

இக்னிஸ் காரின் பக்கவாட்டு தோற்றம்

முன்பே குறிப்பிட்டிருந்தது போலேவே சி பில்லரில் அமைந்துள்ள 3 கோடுகள் இக்னிஸ் காருக்கு தனியான அடையாளத்தை வெளிப்படுத்துகின்றது. ஏ மற்றும்பிபில்லரில் அமைந்துள்ள கருப்பு வண்ணம்  , நேர்த்தியான கருப்பு வண்ண பூச்சூ கொண்ட 15 அங்குல டிசைன் அலாய் வீல் கம்பீரத்தை தருகின்றது. சக்கரங்களுக்கு மேலாக அமைந்துள்ள கருப்பு வண்ண ஆர்சுகள் இடம்பெற்றுள்ளன.

இக்னிஸ் பின்தோற்றம்

எல்இடி டெயில் விளக்குகளுடன் நேர்த்தியான அமைப்பினை பெற்றுள்ள இக்னிஸ் காரின் பின்புற அமைப்பில் பம்பரில் அமைந்துள்ள பிளாஸ்டிக் கிளாடிங்கின் இரு மருங்கிலும் ரிஃபெலக்டர்கள் இடம்பெற்றுள்ளன.

வண்ணங்கள்

இக்னிஸ் காரில் மொத்தம் 9 விதமான வண்ணங்களில் கிடைக்கின்றது. அவற்றில் மூன்று இரட்டை கலவை வண்ணங்களாகும்.

இக்னிஸ் இன்டிரியர் டிசைன்

மிக நேர்த்தியான இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டுடன் 2438மிமீ வீல்பேஸ் பெற்றுள்ளதால் தாரளமான இடவசதியுடன் தொடுதிரை ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஸ்மார்ட்போன் ஆதரவுடன் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே , ரிவர்ஸ் கேமரா , பார்க்கிங் சென்சார்கள் ,  இருவண்ண கலவையில் டேஸ்போர்டு , புதிய ஸ்டீயரிங் வீல் போன்றவை பெற்ற்றுள்ளது.

இக்னிஸ் என்ஜின் விபரம்

1.3 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 75 ஹெச்பி பவருடன் , 190 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் (டெல்டா & ஜெட்டா) இடம்பெற்றுள்ளது.

மாருதி சுசூகி இக்னிஸ் டீசல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 26.80 கிலோ மீட்டர் ஆகும்.

பெட்ரோல் மாடலில்  1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 83 ஹெச்பி பவருடன் , 113 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் (டெல்டா & ஜெட்டா) இடம்பெற்றுள்ளது.

மாருதி சுசூகி இக்னிஸ் பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 20.89 கிலோ மீட்டர் ஆகும்.

இக்னிஸ் சிறப்பு வசதிகள்

இக்னிஸ் காரின் டாப் வேரியன்டில் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , புராஜெக்டர் முகப்பு விளக்குகள் ,  தொடுதிரை ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஸ்மார்ட்போன் ஆதரவுடன் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே , ரிவர்ஸ் கேமரா , பார்க்கிங் சென்சார்கள்  என பலவற்றை பெற்றுள்ளது.

பாதுகாப்பு அம்சம்

அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களான முன்பக்க இரு காற்றுப்பை ,  ஏபிஎஸ் , இபிடி போன்றவை நிரந்தர அம்சமாக அனைத்து ரகத்திலும் கிடைக்கும். கூடுதலாக உயர்ரக வேரியன்டில் ரியர் பார்க்கிங் சென்சார் , ரியர் பார்க்கிங் கேமரா போன்றவை இடம்பிடித்துள்ளது.

இக்னிஸ் கார் விலை

மாருதி இக்னிஸ் கார் முழுமையான விலை பட்டியல் (டெல்லி எக்ஸ்ஷோரூம் )

Variants
பெட்ரோல் டீசல்
சிக்மா Rs. 4.59 லட்சம் NA
டெல்டா Rs. 5.19 லட்சம் Rs. 6.39 லட்சம்
டெல்டா AMT Rs. 5.74 லட்சம் Rs. 6.94 லட்சம்
ஜெட்டா Rs. 5.75 லட்சம் Rs. 6.91 லட்சம்
ஜெட்டா AMT Rs. 6.30 லட்சம் Rs. 7.46 லட்சம்
ஆல்ஃபா Rs. 6.69 லட்சம் Rs. 7.80 லட்சம்

 

ரூ.12.78 லட்சத்தில் ஹூண்டாய் க்ரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிசன் அறிமுகம்
2017 மெர்சிடிஸ்-பென்ஸ் E கிளாஸ் விற்பனைக்கு வந்தது
ரூ.6.99 லட்சத்தில் ஸ்கோடா ரேபிட் ரைடர் விற்பனைக்கு வெளியானது
மஹிந்திரா டியூவி300 எண்டூரன்ஸ் அறிமுகம்
நிசான் மேக்னைட் குரோ எடிசன் விற்பனைக்கு வெளியானது
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 ஜிக்ஸர் SF 250
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
hero-xpulse-200s-4v-pro-white
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
2025 suzuki access 125
Suzuki
2025 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Royal Enfield bear 650 bike on road price
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved