Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ஹோண்டா ஜாஸ் கார் விற்பனைக்கு வந்தது

By MR.Durai
Last updated: 8,July 2015
Share
SHARE
இந்தியாவில் புதிய ஹோண்டா ஜாஸ் ரூ.5.30,900 லட்சம் தொடக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா ஜாஸ் ஹேட்ச்பேக் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வந்துள்ளது.
ஹோண்டா ஜாஸ்
ஹோண்டா ஜாஸ் இளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதாவது 25 வயது முதல் 35 வயதுவரை உள்ளவர்களின் மத்தியில் மிக பெரும் வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 பிரிமியம் ஹேட்ச்பேக் மாடலான ஜாஸ் மிக சிறப்பான இடவசதி அதிகப்படியான மைலேஜ் , சிவிடி கியர்பாக்ஸ் , மேஜிக் இருக்கை மேலும் பல நவீன அம்சங்களை பெற்றுள்ளது.

தோற்றம்
ஜாஸ் காரின் தோற்றம் மிக சிறப்பான வடிவத்தினை பெற்று விளங்குகின்றது. முகப்பில் கருப்பு நிற பட்டைக்கு மத்தியில் ஹோண்டா லோகோ பதிக்கப்பட்டுள்ளது. அதற்க்கு கீழாக குரோம் ஸ்டீரிப் தரப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டிவ் தோற்றத்துடன் கூடிய முகப்பு விளக்கு , வட்ட வடிவ பனி விளக்குகளை பெற்றுள்ளது.
ஜாஸ் மேஜிக் இருக்கை
ஜாஸ் மேஜிக் இருக்கை
பக்கவாட்டில் உள்ள பக்கவாட்டு புரஃபைல் மிக நேர்த்தியான ஏரோடைனமிக்ஸ் வடிவத்தை கொண்டுள்ளது.  15 இஞ்ச் ஆலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பின்புறத்தில் மிக நேர்த்தியான ஸ்டைலிஸ் எல்இடி டெயில் லைட் , பதிவென் பிளேட்டின் மேல் குரோம் பட்டையை கொண்டுள்ளது

இன்டிரியர்

உட்புறத்தில் பிரிமியம் பிஜ் மற்றும் ஸ்போர்ட்டிவ் கருப்பு என இரண்டு வண்ணத்தில்  இருக்கும். டேஸ்போர்டில் 6.2 இஞ்ச் தொடுதிரை அமைப்பு , மேஜிக் இருக்கை போன்ற வசதிகள் உள்ளன.

ஹோண்டா ஜாஸ் கார்
ஹோண்டா ஜாஸ் கார் 

என்ஜின்

ஜாஸ் காரில் 90பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 100என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி தானியங்கி கியர்பாக்சிலும் கிடைக்கும்.
 ஜாஸ் டீசல் காரில் 100பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் i-DTEC என்ஜின் பொருத்தியுள்ளனர். இதன் முறுக்குவிசை 200என்எம் ஆகும். 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளனர்.

ஹோண்டா ஜாஸ் பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 18.7கிமீ ஆகும்.  டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 27.3கிமீ ஆகும்.

 சிறப்பம்சங்கள்

ஜாஸ் காரில் 5 இஞ்ச் ஆடியோ கட்டுப்பாடு அமைப்பு உள்ளது.பூளூடூத் தொடர்பு வசதிகள் உள்ளன. டாப் வேரியண்டில் ஏவிஎன் அதாவது ஆடியோ வீடியோ நேவிகேஷன் 6.2 இஞ்ச் தொடுதிரை அமைப்பு உள்ளது.

டாப் வேரியண்டில் ஸ்போர்ட்டிவ் கருப்பு நிற இண்டிரியர் , இரட்டை காற்றுப்பைகள் , பல தகவல் வழங்கும் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு , ஈக்கோ டிஸ்பிளே போன்றவை உள்ளன.

ஏஸ் பாடி அமைப்பு , ஏபிஎஸ், இபிடி , காற்றுப்பைகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் ஜாஸ் காரில் உள்ளது.

ஹோண்டா ஜாஸ் கார்

ஹோண்டா ஜாஸ் கார் விலை விபரம் (EX-showroom Delhi)

பெட்ரோல்

ஜாஸ் E – ரூ. 5.30,900

ஜாஸ் S – ரூ. 5,94,000

ஜாஸ் SV – ரூ.6,44,900

ஜாஸ் V – ரூ.6,79,900

ஜாஸ் VX –  ரூ.7,29,000

ஜாஸ் S – ரூ. 6,99,000 (சிவிடி)

ஜாஸ் V – ரூ. 7,85,000 (சிவிடி)

டீசல்

ஜாஸ் E – ரூ.6.49,000

ஜாஸ் S – ரூ.7,14,000

ஜாஸ் SV – ரூ.7,64,900

ஜாஸ் V – ரூ.8,09,900

ஜாஸ் VX –  ரூ. 8,59,000

Honda Jazz launched in India starting price at RS. 5.30 lakhs

Mahindra Thar Earth Edition in tamil
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
TAGGED:Honda
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
r15 v4 white
Yamaha
2024 யமஹா R15 V4 விலை, மைலேஜ் சிறப்புகள்
ola s1 air
Ola Electric
ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்
பல்சர் 125 பைக்
Bajaj
பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 tvs apache rtr 310
TVS
2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms