2015 ரெனோ பல்ஸ் விற்பனைக்கு வந்தது

புதிய ரெனோ பல்ஸ் காரில் பல புதிய வசதிகளை இணைத்து ரூ.5.03 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். பல்ஸ் காரில் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ரெனோ பல்ஸ்

மேம்படுத்தப்பட்ட பல்ஸ் ஹேட்ச்பேக் காரில் தானியங்கி முகப்பு விளக்குகள், ஸ்டீயரிங் கன்ட்ரோல் சுவிட்ச்கள், கீ லெஸ் என்ட்ரி ஸ்டார்ட்/ ஸ்டாப் பொத்தான், ஆடியோ சிஸ்டம் பூளூடுத் மற்றும் யூஎஸ்பி இனைப்புடன் , எலக்ட்ரிக் ஃபோல்டிங் ரியர் வீயூ கண்ணாடி, ஓட்டுனர் இருக்கையின் உயரத்தினை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, போன்றவை முக்கிய அம்சங்களாகும்.

உட்ப்புறத்தில் இரட்டை வண்ண டேஸ்போர்டு மத்தியில் பியானோ பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

ஏபிஎஸ், இபிடி, இரட்டை காற்றுப்பைகள் மற்றும் கிராஸ் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.

1.5 லிட்டர் கே9கே டீசல் என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும் கிடைக்கும்.

ரெனோ பல்ஸ் காரின் விலை ரூ.5.03 லட்சம் (ex-showroom delhi)

2015 Renault Pulse gets more features and safety things

Exit mobile version