2017 நிசான் ஜிடி-ஆர் கார் டிசம்பர் வருகை

காட்ஸில்லா என அழைக்கப்படும் நிசான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்டிவ் கார் டிசம்பர் 2ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. தற்பொழுது 2017 நிசான் ஜிடி-ஆர் காருக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட நிசான் ஜிடி-ஆர் கார் இந்த வருடத்தின் இறுதியில் சந்தைக்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில்  முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதால் பண்டிகை காலத்துக்கு முன்னதாக வெளிவரலாம். நிசான் GT-R காரை ரூ.25 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

நியூயார்க் ஆட்டோ ஷோ அரங்கில் வெளியான மேம்படுத்தப்பட்ட 2017 ஜிடி ஆர் முந்தைய மாடலை விட 20 பிஹெச்பி கூடுதலாக மேம்படுத்தப்பட்ட புதிய 3.8 லிட்டர் வி6 ட்வீன் டர்போ பெட்ரோல் எஞ்சின் 562.2 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. 6 வேக டியூவல் கிளட்ச் கியர்பாக்சினை பெற்றுள்ளது.

காரில் முகப்பு பம்பர் , கிரில் முகப்பு விளக்கு , ஏர் வெண்ட் மற்றும் பானெட் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் நேர்த்தியான புதிய வடிவ அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் பம்பர் மேம்படுத்தப்பட்டுள்ளது.

உட்புறத்தில் நேர்த்தியான புதிய டேஸ்போர்டினை கொண்டுள்ளது. பல வசதிகளை கொண்ட ஸ்டீயரிங் வீல் , புதிய 8.0 இஞ்ச் தொடுதிரை அமைப்பினை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவற்றை பெற்றுள்ளது.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலே விற்பனை செய்யப்பட உள்ள நிசான் ஜிடி-ஆர் காரின் விலை ரூ.2 கோடியில் அமையலாம். டெல்லியில் இருந்து நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளது.

2017 நிசான் ஜிடி ஆர் படங்கள்

Share