தாய்லாந்து நாட்டில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 2017 சிட்டி கார் அடுத்த சில வாரங்களில் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய சிட்டி கார் டிசைன்
என்ஜின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் மாற்றங்கள் இல்லாமல் தோற்ற அமைப்பில் நவீன சிவிக் காரின் டிசைன் தாத்பரியங்களை பெற்று மிக நேர்த்தியான க்ரோம் பூச்சூ கிரிலை பெற்று அதன் மத்தியில் ஹோண்டா லோகோ பதிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள டாப் வேரியன்டில் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப் , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் , காரின் பக்கவாட்டில் முந்தைய 15 அங்குல அலாய் வீலுக்கு மாற்றாக புதிய வடிவம் கொண்ட 16 அங்குல அலாய் வீல் , நேர்த்தியாக மாற்றியமைக்கப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்களுடன் எல்இடி நிறுத்த விளக்கு அமைப்பினை பின்புறத்தில் பெற்று விளங்குகின்றது.
இன்ரியர் அமைப்பில் மேம்பாடுகளை கொண்ட இருக்கை மற்றும் டேஸ்போர்டில் புதிய 6.2 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளை கொண்டதாக விளங்குகின்றது. மேலே கொடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான வசதிகளை பெற உள்ள உயர்ரக வேரியன்ட் மாடலை நமது சந்தையில் கூடுதலாக ZX என்ற பெயரில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.
இந்திய சந்தையில் உள்ள சிட்டி காரில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களிலே பவர் மற்றும் டார்க் போன்வற்றில் மாற்றம் இல்லாமல் தொடர உள்ளது. சமீபத்தில் இந்திய சந்தைக்கான விளம்பர படபடிப்பில் இருந்த சிட்டி காரின் படங்கள் வெளியாகியுள்ளதால் ஜனவரி மாத இறுதியில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது.