இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஜாகுவார் XE டீசல் சொகுசு கார் ரூ. 38.25 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று விதமான வேரியன்ட்களில் ஜாகுவார் எக்ஸ்இ டீசல் கிடைக்க உள்ளது.

ஜாகுவார் XE டீசல்

ஜாகுவார் எக்ஸ்இ  டீசல் காரில் இடம்பெற்றுள்ள 2.0 லிட்டர் இன்ஞ்ஜினியம் எஞ்சினில் இருவிதமான பவர் வகையில் கிடைக்கின்றது. இந்தியாவில் 180 bhp பவருடன் 430 Nm டார்க் வழங்கும் வகையிலும் கிடைக்கின்றது.  இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் கார்களில் வசதிகள் மற்றும் தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல் கிடைக்கின்றது.

அலுமினிய பாடி மிக சிறப்பான வலுவுடன் கூடிய ஸ்டைலிங் தோற்றத்தில் விளங்கும் பக்கவாட்டில் சிறப்பான தோற்றத்தினை வழங்கும் அலாய் வீல் பின்புறத்தில் நேர்த்தியான கிடைமட்ட எல்இடி டெயில்விளக்குகளை பெற்றுள்ளது. 7 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

உட்புறத்தில் நேர்த்தியான ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள டேஸ்போர்டில் 8 இஞ்ச் தொடுதிரை இன்டச் கன்ட்ரோல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றுள்ளது. F-டைப் காரின் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் உந்துதலில் அமைந்துள்ள ட்வின் பாட் கிளஸ்ட்டர் ,  கிளோஸ் பிளாக் மற்றும் அலுமினிய ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள சொகுசு தன்மைமிக்க இன்டிரியரை பெற்றுள்ளது.

பென்ஸ் C கிளாஸ், ஆடி A4 மற்றும் BMW 3 Series போன்ற மாடல்களுக்கு சவாலாக ஜாகுவார் எக்ஸ்இ கார் விளங்குகின்றது.

  • ரூபாய் 38.25 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
  • ப்யூர், பிரெஸ்டீஜ் மற்றும் போர்ட்டிஃபோலியோ என மூன்று விதமான வகைகளில் கிடைக்கும்.
  • 180hp பவரை வெளிப்படுத்தும் இன்ஞ்ஜினியம் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.