Categories: Car News

2017 மஹிந்திரா ஸ்கார்பியோ ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது

2017 mahindra scorpio facelift launchedரூ.9.94 லட்சம் ஆரம்ப விலையில் 2017 மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கார்பியோ எஸ்.யூ.வி தோற்ற அமைப்பில் சில மாறுபாடுகளுடன் மூன்று விதமான ஆற்றல் மாறுபாட்டில் கிடைக்கின்றது.

2017 மஹிந்திரா ஸ்கார்பியோ

எஞ்சின் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் நுட்பத்தை கொண்ட மைக்ரோ ஹைபிரிட் அம்சத்தை பெற்றதாக தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்கார்பியோ மாடலில் மேம்படுத்தப்பட்ட தோற்ற அமைப்புடன் டாப் வேரியன்ட் மாடல் அதிகபட்சமாக 20 ஹெச்பி கூடுதலாக பெற்று 140ஹெச்பி ஆற்றலை வழங்குகின்றது.

ஸ்கார்பியோ காரின் முகப்பில் புதுப்பிக்கப்பட்ட 7 ஸ்லாட் கிரில், புதுப்பிக்கப்பட்ட முகப்பு பம்பர், புதிய புராஜெக்ட்ர் விளக்கு, புதிய வட்ட வடிவ பனி விளக்கு, ஓஆர்விஎம் உடன் இணைந்த டர்ன் இன்டிகேட்டர், புதிய 5 ஸ்போக் பெற்ற அலாய் வீல், புதிய ஸ்கிட் பிளேட், சிவப்பு நிறத்தை பெற்ற எல்இடி டெயில் விளக்கு ஆகியவற்றை கொண்டிருக்கின்றது.

உட்புற அமைப்பில் டாப் வேரியன்டில் லெதர் இருக்கைகள், மொபைல் ஹோல்டர் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடிய ரிவர்ஸ் கேமரா உட்பட பல்வேறு அம்சங்களை பெற்றதாக வந்துள்ளது.

ஸ்கார்பியோ எஞ்சின் விபரம்

S3, S5, S7, மற்றும் S11 என மொத்தம் நான்கு விதமான வேரியன்டில் கிடைக்கின்ற 2017 ஸ்கார்பியோ மாடலின் எஸ்3 பேஸ் வேரியன்டில் 2,523cc திறன்பெற்ற m2DICR எஞ்சின் பொருத்தபட்டு 75 ஹெச்பி ஆற்றல் மற்றும் 200 என்எம் டார்க் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது.

S5, S7 என இரண்டிலும் 2.2 லிட்டர் எம் ஹாக் எஞ்சின் 120 ஹெச்பி ஆற்றல் மற்றும் 280 என்எம் டார்க் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது. இந்த இரண்டு எஞ்சினிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

S7, S11 ஆகிய வேரியன்டில்  2.2 லிட்டர் எம் ஹாக் எஞ்சின் 140 ஹெச்பி ஆற்றல் மற்றும் 320 என்எம் டார்க் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது. இந்த இரண்டு எஞ்சினிலும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என இரண்டிலும் கிடைக்க உள்ளது.

எஞ்சின் பவர் டார்க் கியர்பாக்ஸ்
2,523cc m2DICR 75hp 200Nm 5 வேக மேனுவல்
2.2-litre mHawk 120hp 280Nm 5 வேக மேனுவல்
2.2-litre mHawk 140hp 320Nm 6 வேக மேனுவல்

 

சிறப்பம்சங்கள்

அனைத்து வேரியன்டிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி, ஸ்பீட் அலர்ட் , அனைத்து கதவுகளிலும் ஆட்டோ டோர் லாக் மெக்கானிஷம் மற்றும் டிஜிட்டல் எஞ்சின் இம்மொபைல்சர் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டதாக கிடைக்கின்றது.

2017 மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்.யூ.வி விலை பட்டியல்

மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.9.94 லட்சம் விலையில் அமைந்துள்ளது. சென்னை எக்ஸ்- ஷோரூம் முழுமையான விலை பட்டியல் பின் வருமாறு ;-

வேரியன்ட் எக்ஸ்-ஷோரூம் சென்னை
Scorpio S3 2.5 L Manual 2WD ரூ. 9,94,470
Scorpio S5 2.2 L 120 HP 2WD ரூ. 11,78,029
Scorpio S7 2.2 L 120 HP 2WD ரூ. 12,77,145
Scorpio S7 2.2 L 140 HP 2WD ரூ. 13,07,145
Scorpio S11 2.2 L 140 HP 2WD ரூ. 14,97,642
Scorpio S11 2.2 L 140 HP 4WD ரூ. 16,23,114

 

Recent Posts

ஆடம்பர கார்களுக்கு எம்ஜி செலக்ட் டீலரை துவங்கும் ஜேஎஸ்டபிள்யூ..!

ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…

17 hours ago

160கிமீ ரேஞ்ச் வழங்கும் 2024 ரிவோல்ட் RV400 அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…

22 hours ago

இந்தியாவில் ஹோண்டாவின் 300-350cc பைக்குகள் ரீகால் அழைப்பு

கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…

1 day ago

முதல் நாளில் 1,822 முன்பதிவுகளை அள்ளிய கியா கார்னிவல்..!

கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…

1 day ago

டிரையம்ப் ஸ்பீடு T4 Vs ஸ்பீடு 400 வித்தியாசங்கள் என்ன..!

டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…

2 days ago

ரூ.84,990 விலையில் ரிவோல்ட் RV1, RV1+ இ-பைக் விற்பனைக்கு அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…

2 days ago