Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2019 மாருதி சுஸூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது

by automobiletamilan
January 22, 2019
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

 

0ef20 maruti suzuki baleno facelift teaser

மேம்படுத்தப்பட்ட 2019 மாருதி சுஸூகி பலேனோ காருக்கு நெக்ஸா டீலர்கள் வாயிலாக ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய டீசரில் பலேனோ காரில் சிறிய அளவிலான தோற்ற மாற்றங்கள் மற்றும் இன்டிரியரில் கூடுதல் வசதியை பெற்றிருப்பதனை உறுதி செய்கின்றது.

இந்திய பயணிகள் சந்தையில் கடந்த 2015 ஆம் ஆண்டில் பிரிமியம் ஹேட்ச்பேக் மாடலாக விற்பனை செய்யப்படுகின்ற சுஸூகி பலேனோ கார் அமோகமான வரவேற்பை பெற்று விளங்குகின்றது.

 2019 மாருதி சுஸூகி பலேனோ

83 bhp ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டார்க் 115 NM மற்றும் மைலேஜ் லிட்டருக்கு 21.4கிமீ ஆகும். 74 bhp ஆற்றலை வழங்கும் 1.3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டார்க் 190 NM மற்றும் மைலேஜ் லிட்டருக்கு 27.39கிமீ ஆகும்.

இது தவிர பலேனோ ஆர்எஸ் என்ற பெயரில் பெர்ஃபாமென்ஸ் ரக மாடலில் 101 hp பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் என்ஜின் மாடலும் கிடைக்கின்றது.

2019 பலேனோ மாடலில் வரவுள்ள பாரத் கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்ற பாதுகாப்பு அம்சத்துடன், ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி இணைக்கப்பட்டு உள்ளது. மேம்படுத்தப்பட்ட மாருதி ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் புதிதாக பல்வேறு கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த ஸ்பை படங்கள் வாயிலாக பலேனோ காரின் தோற்ற அமைப்பில் முகப்பில் பம்பர், ஹெட்லைட் புதுப்பிக்கப்பட்டு, புதிய கிரில் மற்றும் அலாய் வீல் ஆகியற்றை பெற்றிக்கலாம்.

ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் மற்றும் வரவுள்ள டாடா 45X ஆகிய மாடல்களை எதிர்கொள்ள உள்ள 2019 மாருதி சுஸூகி பலேனோ கார் ஜனவரி மாதம் 27ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்படலாம். தற்போது ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

Tags: MarutiMaruti Balenoமாருதி சுஸூகி பலேனோ
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan