அடுத்த சில வாரங்களில் வெளியாக உள்ள மேம்படுத்தப்பட்ட புதிய மாருதி சுஸூகி பலேனோ காரின் தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியரில் புதிய வசதிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

மாருதி சுஸூகி பலேனோ

புதிய மாருதி சுஸூகி பலேனோ காரின் சோதனை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய காரின் முகப்பு தோற்றம் மட்டும் தற்போதைக்கு காட்சியளிக்கின்றது. பிரிமியம் ஹேட்ச்பேக் சந்தையில் சிறந்து விளங்கும் பலேனோ 2015 ஆம் ஆண்டு முதல் சந்தையின் முதன்மையான மாடலாக விளங்குகின்றது.

84.3பிஎஸ் ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டார்க் 115என்எம் மற்றும் மைலேஜ் லிட்டருக்கு 21.4கிமீ ஆகும். 75பிஎஸ் ஆற்றலை வழங்கும் 1.3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டார்க் 190என்எம் மற்றும் மைலேஜ் லிட்டருக்கு 27.39கிமீ ஆகும்.

இது தவிர பலேனோ ஆர்எஸ் என்ற பெயரில் பெர்ஃபாமென்ஸ் ரக மாடலில் 101 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் என்ஜின் மாடலும் கிடைக்கின்றது.

2019 பலினோ மாடலில் வரவுள்ள பாரத் கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்ற பாதுகாப்பு அம்சத்துடன், ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி இணைக்கப்பட்டு உள்ளது. மேம்படுத்தப்பட்ட மாருதி ஸ்மார்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் புதிதாக பல்வேறு கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

ஸ்பை படங்கள் வாயிலாக பலேனோ ஆர்எஸ் காரை போன்ற ஸ்மோக்டு எஃபக்ட் பெற்ற ஹெட்லேம்ப், புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் பம்பரை பெற்றுள்ளது. பக்கவாட்டில் புதிய வடிவ அலாய் வீல் மற்றும் டெயில் விளக்கில் மாறுதல்க் இருக்கலாம்.

spy image source-gaadiwaadi

ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் மற்றும் வரவுள்ள டாடா 45X ஆகிய மாடல்களை எதிர்கொள்ள உள்ள 2019 பலேனோ கார் ஜனவரி மாத இறுதி வாரத்தில் அல்லது பிப்ரவரி மாத தொடக்க வாரத்தில் கிடைக்கப் பெறலாம்.